Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


'நோட்டா'வுக்கு வாக்குகள் இந்த முறை குறையும்?

'நோட்டா'வுக்கு வாக்குகள் இந்த முறை குறையும்?

- நமது சிறப்பு நிருபர் -
ஒவ்வொரு தேர்தலிலும் 'நுாறு சதவீத வாக்குப்பதிவு' என்பதைத் தேர்தல் ஆணையம் தொடர்ந்து விழிப்புணர்வாக மேற்கொண்டு வருகிறது. யதார்த்தத்தில் 70 சதவீதத்தைக் கடப்பதே பெரும் சவாலாக உள்ளது. இந்த முறை அந்த இலக்கை எட்டிப்பிடிக்க முடியும் எனத் தேர்தல் ஆணையம் அதீத நம்பிக்கையுடன் காத்திருக்கிறது.

தேர்தல் ஆணையத்தின் இந்த நம்பிக்கைக்குப் பின்னால் இருக்கும் முக்கியக் காரணி 'எஸ்.ஐ.ஆர்.' பணி. இதன் மூலம் இரட்டைப் பதிவு, இறந்தவர்களின் பெயர்கள் மற்றும் முகவரி மாறியவர்களின் ஓட்டுகள் எனப் பதிவாக வாய்ப்பே இல்லாத 'ஓட்டுகள்' பெருமளவில் நீக்கப்பட்டுள்ளன. வாக்காளர் பட்டியல் தெளிவு பெற்றுள்ளதால், இம்முறை வாக்குப்பதிவு சதவீதம் தானாகவே உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

'நோட்டா' சாதனை


தேர்தலில் போட்டியிடும் எவருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்ற வாக்காளர்களின் ஜனநாயகக் கோபத்திற்கு அங்கீகாரம் அளிக்கவே, கடந்த 2014 லோக்சபா தேர்தலில் 'நோட்டா' அறிமுகம் செய்யப்பட்டது.

அறிமுக ஆண்டு


(2014): நாடு முழுவதும் 59.97 லட்சம் ஓட்டுகள் (1.1 சதவீதம்) நோட்டாவுக்கு விழுந்தன. தமிழகத்தின் பங்கு: 39 தொகுதிகளில் 5.82 லட்சம் ஓட்டுகள் (1.4 சதவீதம்) பதிவாகின.

நீலகிரி சாதனை:


இந்தியாவிலேயே நோட்டா ஓட்டுகளை அதிகம் பதிவு செய்த தொகுதியாக நீலகிரி (2014) உருவெடுத்தது. அங்கு மட்டும் 46,559 ஓட்டுகள் நோட்டாவுக்கு விழுந்தது குறிப்பிடத்தக்கது.

ஐந்தாண்டு கணக்கு


(2018--2022): பல்வேறு தேர்தல்களில் சேர்த்து மொத்தம் 1.29 கோடி வாக்காளர்கள் 'யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை' எனத் தெரிவித்துள்ளனர்.

நான்குமுனைப் போட்டி


அரசியல் விமர்சகர்கள் கூறியதாவது: அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பதுதான் ஜனநாயகத்தின் அடிப்படை. யாருக்கும் வாக்களிக்க விரும்பாவிட்டால், நோட்டாவுக்குப் பதிவிடுவது வாக்காளரின் உண்மையான மனநிலையைக் காட்டும். நோட்டா அறிமுகமானபோது இருந்த விழிப்புணர்வு தற்போது மக்களிடையே சற்று மங்கியுள்ளது.

குறிப்பாக, தமிழகத்தில் தற்போது தி.மு.க., - அ.தி.மு.க., - நா.த.க., - த.வெ.க. என நான்குமுனைப் போட்டி நிலவுகிறது. இத்தனை காலமும் குறிப்பிட்ட கட்சிகளுக்கே மாறி மாறி வாக்களித்துச் சலித்துப் போனவர்களுக்கு, இப்போது கூடுதல் தேர்வுகள் கிடைத்துள்ளன.

இதனால், இதுவரை நோட்டாவுக்கு ஓட்டளித்து வந்தவர்கள், இம்முறை தங்களுக்குப் பிடித்த ஏதேனும் ஒரு கட்சிக்கு வாக்களித்துவிட்டு, நோட்டாவுக்கு 'டாட்டா' சொல்லும் நிலையும் ஏற்படலாம்.

ஆக, இந்தத் தேர்தல் 100 சதவீத வாக்கை நோக்கிய பயணமா அல்லது நோட்டாவைத் தாண்டிய மாற்றத்திற்கான பயணமா என்பது வாக்குப்பதிவு முடிவில் தெரிந்துவிடும்.

Advertisement

ஏப் 23, 2026 11:06 am

நோட்டாவை அறிமுகப் படுத்தியதே ஒரு மிக மோசமான ஜனநாயக விரோதச் செயல். அது என்ன "நோட்டா?" அது ஆளா இல்லை, ஒரு கட்சியா இல்லை ஒரு பொருளா இல்லை அது வாக்காளர் தம் விருப்பமாந வேறு ஒருவரைக் குறிப்பிடுவதற்கான வசதியா?

"மேற்குறிப்பிட்ட யாருக்கும் நான் வாக்களிக்க விரும்பவில்லை" என்று இதைப் பதிவு செய்து, இவ்வளவு செலவும் மனிதவளமும் கொட்டி, அதை மெனக்கெட்டு எண்ணி என்னத்தைச் சாதிக்கப் போகிறார்கள்?
"நோட்டா" வைப் பதிவு செய்பவருக்கு அவரது விருப்பப் பெயரை அதே வாக்களிப்பு இயந்திரத்தில் பதிவு செய்ய என்ன மாற்று ஏற்பாடு இருக்கிறது?

Reply Rate this
ஏப் 23, 2026 10:46 am

நோட்டாவிற்கு பதில் நம்ம காதிலேயே பூ சுத்தும் விஜய் இருக்கிறாரெ.

Reply Rate this
ஏப் 23, 2026 09:43 am

நோட்டாவை இந்த முறையும் தோற்க்கடிக்க ரெம்பாவாய் கஷ்டப்பட்டிருக்கோம்.... கம்பெனி மண்ட பத்திரம்னு சொல்ல வர்றது புரியுது... பார்ப்போம்

Reply Rate this
ஏப் 23, 2026 09:11 am

பெரிய கட்சிகளின் பெரும்பாலான வேட்பாளர்கள் மகா அயோக்கியர்கள். நோட்டாவே சாலச்சிறந்தது.

Reply Rate this
ஏப் 23, 2026 09:09 am

எங்கள் தொகுதியில் எங்கள் பகுதியில் ஆளும்கட்சி அலுவலகத்தில் பணம் பட்டுவாடா பகிரங்கமாக நடப்பதை கண்கூடாக பார்த்தேன். இப்படிப்பட்ட அழுகுணி போங்கு ஆட்டம் எப்படி ஜனநாயக தேர்தல் ஆகும்??

Reply Rate this
ஏப் 23, 2026 09:07 am

நோட்டாவில் அதிக எண்ணிக்கையில் மக்கள் வாக்களித்து இந்த தேர்தல் என்பதே ஒரு சுத்த நாடகம், ஜனநாயகம் என்ற பெயரில் ஊர் உலகை ஏமாற்றும் வேலை என்பதை அனைவரும் அம்பலப்படுத்த வேண்டும்.

Reply Rate this
ஏப் 23, 2026 09:05 am

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நோட்டாவுக்கு இம்முறை வாக்குகள் கூடும். பணம் கொடுத்து வெல்லும் தேர்தல் ஜனநாயக தேர்தல் அல்ல. இது ஜனநாயக நாடு என்று சொல்லி உலகத்தையே ஏமாற்றிக்கொண்டிருக்கிறோம்.

Reply Rate this
ஏப் 23, 2026 08:08 am

அடித்து சொல்கிறேன், நோட்டாவுக்கு வாக்குகள் இந்தமுறை கூடும், ஏன்னா பல TVK தட்குரிகளுக்கு ஓட்டுபோட தெரியாது. அவர்களின் பல ஓட்டுகள் நோட்டாவுக்கே.

Reply Rate this
ஏப் 23, 2026 07:53 am

நோட்டாவுக்கு ஏன் குறையும். போட்டியிடுபவர்களில் யார் உத்தமன்? யார் நல்லவன்? ஓரு ஆளை விரல் சுட்டி காண்பியுங்கள். என்னுடைய தோல்வியை ஒப்புக் கொள்கிறேன்.

Reply Rate this
ஏப் 23, 2026 07:43 am

நோட்டாவுக்கு வாக்குகள் குறையும், அது இம்முறையும் பாஜக வாக்குகளை விட அதிகமாக இருக்கும். தமிழன்டா.

Reply Rate this