வெற்று மனுவுடன் வந்த த.வெ.க., வேட்பாளர்
துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தொகுதி த.வெ.க., வேட்பாளராக, கேரளாவில் லாட்டரி ஏஜன்சி நடத்தும் அன்னை சரவணன் நிறுத்தப்பட்டுள்ளார். அவர், தேர்தல் நடத்தும் அலுவலர் செந்தில்வேல் முருகனிடம், வேட்பு மனுவை அளித்தார்.
மனுவை வாங்கி பார்த்த அதிகாரி அதிர்ச்சி அடைந்தார். வேட்பு மனுவில் தகவல்கள் பூர்த்தி செய்யப்படாமல் இருந்தன. அவற்றை முழுமையாக பூர்த்தி செய்து வரும்படி கூறி, மனுவை திருப்பி அளித்தார்.
அப்போது, வேட்பாளருடன் வந்த ஒருவர், ஆவணங்கள் இணைக்க வேண்டுமா என கேட்க, அதிகாரி, 'முதலில் வேட்பு மனுவை பூர்த்தி செய்யுங்கள். அதன்பின் அதில் கேட்டுள்ள ஆவணங்களை இணையுங்கள்' எனக்கூறி அனுப்பினார். அதைத் தொடர்ந்து, வேட்பாளர் சரவணன், வேட்பு மனுவுடன் திரும்பி சென்றார்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்