Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 விஜயால் தே.ஜ., கூட்டணிக்கு பாதிப்பு இல்லை: பா.ஜ., ராஜா

 விஜயால் தே.ஜ., கூட்டணிக்கு பாதிப்பு இல்லை: பா.ஜ., ராஜா

திருத்தணி: திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் கோவிலில், பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா தன் குடும்பத்தினருடன் நேற்று சுவாமி தரிசனம் செய்தார்; உற்சவர் திருக்கல்யாணத்தில் பங்கேற்று வழிபட்டார். தொடர்ந்து, ராஜா அளித்த பேட்டி:

தி.மு.க., அமைச்சர்கள் ஒவ்வொருவரும் 60,000 கோடி ரூபாய்க்கு ஊழல் செய்துள்ளனர். தமிழகத்தில் முதன் முதலில் ஹிந்தியை திணித்தது, முதல்வர் ஸ்டாலின் குடும்பம் தான். அவர்கள் நடத்தும் பள்ளியில் ஹிந்தி கற்பிக்கப்படுகிறது. எனவே, ஹிந்தி திணிப்பு பற்றி பேச ஸ்டாலினுக்கு வெட்கம் இல்லையா?

தேர்தல் நேரத்தில் தான், பிரதமர் மோடி தமிழகம் வருவதாக கூறுகின்றனர். ஆனால், கடந்த ஐந்து ஆண்டில், 46 முறை பிரதமர் மோடி தமிழகத்திற்கு வந்து, நலத்திட்டப் பணிகளை துவக்கி வைத்துள்ளார்.

தி.மு.க., மற்றும் திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளின் ஓட்டுகளை மட்டுமே த.வெ.க., தலைவர் விஜய் பிரிப்பார்; தே.ஜ., கூட்டணி ஓட்டுகளை பிரிக்க மாட்டார். விஜயால் தே.ஜ., கூட்டணிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement