Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


அனுபவம் இல்லாமல் த.வெ.க., தடுமாற்றம்!

அனுபவம் இல்லாமல் த.வெ.க., தடுமாற்றம்!

- நமது நிருபர் -

கூட்டணி அமைப்பதில் முன் அனுபவம் இல்லாததாலும், ஆட்சி அமைப்பதற்கு பின்பற்ற வேண்டிய சட்ட விதிமுறைகள் குறித்த விபரங்களை அறியாததாலும், த.வெ.க., ஆட்சி அமைக்க முடியாமல் தடுமாறி வருகிறது.

இது குறித்து, த.வெ.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: த.வெ.க., துவங்கிய நாளில் இருந்தே, கட்சியை நடத்துவதில் அனுபவம் இல்லாததால், ஏகப்பட்ட தடுமாற்றங்களை சந்தித்து இருக்கிறது. பிரசார கூட்டங்களை நடத்துவதில், முன் அனுபவம் இல்லாததால், கரூரில் பெருந்துயர சம்பவம் நடந்தது.

அவசரம்:

தேர்தல் கமிஷனருக்கு அனுப்ப வேண்டிய கடிதத்தை, உள்ளாட்சி தேர்தலை நடத்தும், மாநில தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பியது; உள்துறை செயலருக்கு பதில், மணிப்பூர் கவர்னருக்கு கடிதம் எழுதியது என, ஏகப்பட்ட குளறுபடிகள் தேர்தலுக்கு முன் நிகழ்ந்தன.

தேர்தல் நடத்தை அமலுக்கு வந்த பின், பிரசார கூட்டத்துக்கு அனுமதி வாங்குவதில் குளறுபடி ஏற்பட்டது. இப்படி தொடக்கத்தில் இருந்தே, பல குளறுபடிகள் நடந்ததை, தலைமை கவனத்தில் கொள்ளாததால், இன்று வெற்றி பெற்றும், ஆட்சி அமைக்க முடியாமல் தடுமாறி வருகிறது.

சட்டசபை தேர்தலில், 108 இடங்களில் வெற்றி பெற்று, அதிக தொகுதிகளை பெற்ற கட்சியாக, த.வெ.க., உள்ளது.

இதை வைத்தே, கவர்னரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோர முடியும். அதை முறையாக செய்யவில்லை. முதலில் ஆட்சி அமைக்க உரிமை கோரும் கடிதத்தை, கவர்னர் மாளிகைக்கு நள்ளிரவில் எடுத்து சென்றனர். அங்குள்ள அதிகாரிகள் இவ்வாறு வரக்கூடாது என்று தெரிவித்ததுடன், ஆட்சி அமைக்க கோருவதற்கான வழிமுறைகளை எடுத்துரைத்துள்ளார்.

அதையும் முறையாக பின்பற்றவில்லை. கவர்னரை சந்திக்க சென்ற விஜய், பூங்கொத்து எதையும் எடுத்துச் செல்லவில்லை. ஆனால், கவர்னர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றதுடன், நினைவுப்பரிசு வழங்கினார்.

கவர்னரை சந்திக்க செல்லும் போது, என்ன செய்ய வேண்டும் என்பதை கூட அறிந்து கொள்ளவில்லை. அதேபோல், அதிக இடங்களை பெற்றதால், தங்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று கோருவதற்கு பதிலாக, அவசரப்பட்டு காங்கிரசின் ஆதரவை பெற்று, கூட்டணி ஆட்சி அமைக்க, உரிமை கோரப்பட்டு விட்டது.

இதனால், பெரும்பான்மை எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு இருப்பதற்கான ஆதாரங்களை காட்ட வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது.

திணரும் தலைமை:

அதேபோல, ஆட்சி அமைக்க, பிற கட்சிகளிடம் ஆதரவு கேட்கும் விஷயத்திலும், கட்சி தலைமை கோட்டை விட்டது. தேர்தலுக்கு பின், கூட்டணி அமைக்க முடிவெடுத்தால், அதற்கு அனுபவமிக்க நிர்வாகிகள் குழுவை நியமித்திருக்க வேண்டும்.

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், முன்னாள் எம்.எல்.ஏ., - ஜே.சி.டி.பிரபாகர் என, அனுபவம் வாய்ந்தவர்கள் கட்சியில் இருந்தும், அவர்களின் பேச்சை விஜயின் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி கேட்கவில்லை.

வி.சி., - கம்யூ., கட்சிகளிடம், கூட்டணி குறித்து பேச, பொதுச்செயலர் ஆனந்த் தலைமையில் சீனியர்கள் அடங்கிய குழுவை அமைத்திருந்தால், ஏற இறங்க பேசி, கூட்டணி அமைத்திருக்க முடியும். ஆனால், ஜானோ, அரசியல் அனுபவம் இல்லாத, தன் நண்பர்களை வைத்து, கூட்டணி கட்சிகளை அணுகி உள்ளார்.

ஏற்கனவே வேறு திட்டத்தில் இருக்கும், விசி., - கம்யூ., கட்சிகளுக்கு, இது எரிச்சலை தந்துவிட்டது. எனவே தான், விஜயை நேரடியாக பேச சொல்லுங்கள், எனக்கூறி, கூட்டணிக்கு வர விரும்பிய கட்சிகளும் அமைதியாகி விட்டன.

த.வெ.க., இடத்தில், தி.மு.க.,வோ அ.தி.மு.க.,வோ இருந்திருந்தால், இந்நேரம் பதவி ஏற்பு விழாவே நடத்தி இருப்பர். ஆனால், முன் அனுபவம் இல்லாமல், இவ்வளவு பெரிய வெற்றியை பெற்றும், எதுவுமே செய்யமுடியாமல் த.வெ.க., தடுமாறிக் கொண்டு இருக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement

பார்த்துக்குங்க! எங்க தங்க தள்ளபதி பேரறிஞர்? அன்னாவுக்கு பக்கோடா வாங்கி குடுத்தூ அரசியல் அரிச்சுவடி படித்தவர். ஆரியப்படைத்தலைவரான கவர்னர் ரவியை பின்னங்கால் பிடரியில் பட விரட்டியடித்தவராக்கும் எங்க தள்ளபதி.சும்மா விசிலு ஊதிக்கிட்டு கூத்தாடி வசனம் பேசிக்கிட்டு முதலையமிச்சர் ஆகப் பாக்குறாங்க.கெரகத்த இந்த கூத்தையெல்லாம் பாக்க வேண்டியது மரத்த தமிழன் தலையெழுத்து.

Reply Rate this
மே 08, 2026 04:00 pm

When he acted many films, does he not know as to how to give a respect to Constitutional head - Governor? Just like that school boy with the file he gives respect. By the side, the so called experienced person Shri Sengottaiyan stands, he should have advised him. Will Sengottaiyan go like this to late CM Jeyalalithaa? TVK Leader gives respect to the party who supports with five seats, respected with shawl and he was so kind, but the same respect to Governor failed.

Reply Rate this
மே 08, 2026 02:59 pm

ஆட்டக்காரர்களின் கூட்டம். முன்பின் நாட்டுக்காக எதையும் செய்தது இல்லை. இனியும் செய்யத் தெரியாது.

Reply Rate this
மே 08, 2026 02:33 pm

NO PROBLEM.
THERE WILL BE A GENERAL ELECTION SOON.
BE READY.

Reply Rate this
மே 08, 2026 01:53 pm

கல்லா பெட்டி கூட்டணின்னு சொல்லிட்டு இப்ப அவங்கள சேர்த்துவிட்டு இருக்கீங்க.
இது பச்சோந்திதனம் இல்லையா

Reply Rate this
மே 08, 2026 12:34 pm

experience must

Reply Rate this
மே 08, 2026 12:06 pm

இதைத்தானடா.... காட்டு கத்தலா கத்திட்டிருந்தேன்... விஜய் அரசியலுக்கு நுழைஞ்ச போதிலிருந்தே...? ஒரு பியூன் வேலைக்கு போனாகூட “அனுபவம்” உண்டா.. என்ற கேள்வி...? ஐடியில் வேலைக்கு போனாலும் “அனுபவம்” உண்டா என்று கேள்வி...? சிறிய எடுத்துக்காட்டு...? எண்ணை ஆட்டும் மரச்செக்கில் சுற்றும் மாடுகளை... வில்வண்டியில் பூட்டி சாலையில் விட்டால்... அது சாலையில் செல்லாது... இருந்த இடத்திலேயேதான் சுற்றிக் கொண்டிருக்கும்... ஏனெனில், அது கன்றுகுட்டியாய் இருந்த காலத்திலிருந்தே... பூட்டியவுடன் ஒரு வட்டத்திற்குள்ளே சுற்றி சுற்றி வந்து பழக்கம். அதுபோல... இவன் நடிகன்... பிறந்ததிலிருந்தே தன் தந்தை டைரக்சன் செய்ததை பார்த்து நடிக்க வந்து... டைரக்டர் சொல்வதை அப்படியே செய்து... வசனகர்த்தா எழுதி கொடுத்ததை மனப்பாடம் செய்து அப்படியே ஒப்பிப்பது போன்ற பணிகளை செவ்வனே செய்ததால்... சிறந்த நடிகரானர்... ஆனால், அரசியல் எனும் களமே வேறு... அரசியலில் நுழைந்தால்... இவரே சிந்திக்கணும், இவரே வழிநடத்தணும், இவரே களத்தில் இறங்கி முன்மாதிரியாக திகழணும்... நடுவில், களத்தில் உள்ள கட்சிகளுக்கு போட்டியாக முடிச்சவிக்கித்தனம், மொள்ளமாதிரித்தனம், ரௌடித்தனம் இதையெல்லாம் செய்யணும்... ஏனெனில்... அரசியல் களத்தில் எதிர்க்கட்சியில் உள்ளவன் கத்தி எடுத்தால்... அட்லீஸ்ட் நீ கம்பை எடுத்தால்தான் அவனை எதிர்த்து போராட முடியும்... இல்லை, இல்லை... கைகளே போதும் போராடுவதற்கு என்றால்... கை துண்டாடப்பட்டுதான் வர முடியும்... அரசியல் களம்... குறிப்பாக தமிழ்நாட்டு அரசியல் களமே வேறு... இதில் களமாடிட தனித்திறமை வேண்டும்... அப்படி வந்தவர்கள்தான், வந்து வென்றவர்கள்தான் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சியினரும்... 15 ஆண்டுகளாக கத்தி கத்தி... ஊர்ஊராகச் சென்று பேசியும் இன்னும் ஒரு எம்எல்ஏ...கூட ஆக முடியவில்லை, நாம் தமிழர் கட்சி சீமானால்... காரணம்... எதிரியின் வீயூகத்தை தெரிந்து, புரிந்து எதிர் அரசியல் செய்ய வேண்டும்... அதைப்போலவேதான் கமல் வந்தார்... நடிப்பதில் வல்லவர், இயக்குநருக்கே நடிப்பை சொல்லி கொடுப்பவர்... ஆனால், அரசியல் களத்தில் படுதோல்வி அடைந்து, இறுதியில் சரணடைந்தார்.. விடுதலைசிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்... இவரே திமுக..வில் இருந்தவர்தான், ஆனாலும், எவ்வளவு பிரச்சினைகள்... அத்தனையையும் தாங்கி, தாண்டி இன்று மாற்றமுடியாத சக்தியாக உருவெடுத்துள்ளார் தமிழ்நாட்டு அரசியல் களத்தில்...? விஜய்... அரசியலுக்கு வந்ததில் தவறில்லை... வந்து அரசியல் களத்தில்... தரையில் இறங்கி... மக்களிடம் சென்று, அவர்களுடன் உறவாடி, போராட்டம் ஆர்ப்பாட்டங்கள் செய்து அனுபவம் பெற்று... அதன் பின்னர் தேர்தலில் போட்டியிட்டிருந்தால்... அவரை யாரும் அசைத்திருக்க முடியாது... “நீதான் முதலமைச்சர்”... “நீதான் முதலமைச்சர்”... உனக்க மக்கள் செல்வாக்கு பயங்கரமா இருக்கிறது... எவனோ நன்றாக உசுப்பேத்தி, சொறிந்துவிட்டதால்... இயக்குநர் சொல்லி கொடுத்தபடி நடிக்கும் விஜய்... திரைப்படம் போல எண்ணி களத்தில், தரையில் நிற்கால்... என்ன நடக்கிறது என்பதை அறியாமலேயே எடுத்த உடனே “முதலமைச்சர்” என்ற கனவுடன் வந்தார்.... 108 சீட்களை பெற்றார்.... மாநில கட்சிகளை அழித்தே பழக்கப்பட்ட வடநாட்டு மத்திய அரசியல் சுகங்கண்ட வடநாட்டு கட்சிகளில் ஒன்றான காங்கிரஸ் ஓடிவந்து ஆதரவு தந்து... அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பாஜக...வை கோபப்பட வைத்துவிட்டது... இந்தியாவில் அனைத்து மாநில கட்சிகளையும் “ஜோலி” முடித்துவிட்ட குறிப்பா, மம்தாவையே வீழ்த்திய பாஜக...வை எதிர்த்து விஜய் அரசியல் கட்சி நடத்துவது மிகவும் கஷ்டம்... திமுக...வை பகையாளராக பாஜக பார்த்ததேயில்லை... காங்கிரசை தலையில் வைத்து கொண்டாடியதால்... தி.மு.க.வை ஜென்மவிரோதியாக பார்த்ததது பாஜக... இப்போது, காங்கிரஸ் தவெக... பக்கம் சென்றதால்... தவெக... பரம்பரை எதிரி ஆகிவிட்டது... திமுக பெரிய இயக்கம்.. அது பாஜகவின் செயல்களை எதிர்த்து வெற்றி பெற்றது... ஆனால், விஜய்.. ஒரு “ஜோட்டா பச்சா”... பாஜக...வுக்கு முன்பு.... விஜய் “மாபெரும் மக்கள் செல்வாக்கு எனக்கு இருக்கிறது” என்று ஆணத்துடன் நடந்து கொண்டால்... மத்திய பாஜக அரசிடம் அனைத்து துருப்பு சீட்டுகளும் உள்ளன... ஒவ்வொன்றாக வெளியே எடுத்துபோட்டு... விஜய்..யை ஒன்றில்லாமல் செய்துவிடும்... ஆனானப்பட்ட “மம்தா”வையே தூக்கி போட்டு மிதித்த பாஜக...வுக்கு விஜய் ஒரு சுண்டைக்காய்... அதனால்தான் விஜய் வரும்போதே... அரசியலில் அனுபவம் இல்லாமல் ஆணியே புடுக்க முடியாது என்றேன்... நான் சொன்னது நடந்து கொண்டிருக்கிறது... இதில் வியப்பேதுமில்லை... இப்போதுகூட விஜய் பாஜகவிடம் சரணடைந்தால்.... தப்பிப்பான்... இல்லென்னா... அவ்வளவுதான் அதோ கதிதான்...? பாவம்...?

Reply Rate this
கானோஜ் அந்த கொளத்தூர், சென்னை படுதோல்வி பத்தி உன் கருத்து சொல்லேன்
மே 08, 2026 02:51 pm
Rate this
மே 08, 2026 11:16 am

திருட்டு திராவிடர்கள் செய்வது போல் விஜய் சொந்த கஜானாவைய்ய கொஞ்சம் திறந்தாலே விட்டில் பூச்சிகள் வந்து விழுந்து விடுமே.

Reply Rate this
மே 08, 2026 11:08 am

இவங்களுக்கு ஆணவம் தலைக்கேறிவிட்டது அதற்குண்டான பலனை அனுபவித்தே ஆகவேண்டும்.

Reply Rate this
மே 08, 2026 11:07 am

அனுபவம் வாய்ந்த செங்கோட்டையன் போன்றோர் இருந்துமா இந்த நிலைமை

Reply Rate this