Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


அரசு ஊழியர்களின் செல்வாக்கை பெற்ற த.வெ.க.,; கடும் அதிர்ச்சியில் தி.மு.க.,

அரசு ஊழியர்களின் செல்வாக்கை பெற்ற த.வெ.க.,; கடும் அதிர்ச்சியில் தி.மு.க.,
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

விருதுநகர்: தமிழகத்தில் ஓய்வு பெற்ற, இப்போது பணிபுரியும் அரசு ஊழியர்களின் ஆதரவு த.வெ.க.,வுக்கு அதிகளவில் சென்றுள்ளதால் தி.மு.க., கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.

தமிழக அரசு ஊழியர்கள் தி.மு.க.,விற்கு தான் ஓட்டளிப்பர் என்பதை தபால் ஓட்டுக்களின் முடிவே சொல்லும். ஆனால் இந்த முறை த.வெ.க., தி.மு.க., அ.தி.மு.க., என மூன்று கட்சிகளுக்கும் சரி சமமாகவும், சில தொகுதிகளில் த.வெ.க.,வுக்கு அதிகமாகவும் அரசு ஊழியர்களின் தபால் ஓட்டு சென்றுள்ளது.

அரசு ஊழியர் சங்கத்தின் ஒரு பிரிவு பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றாத ஸ்டாலினின் தி.மு.க., அரசு மீது கடும் கோபத்தில் இருந்தனர். ஸ்டாலின் அறிவித்த உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் அதிருப்தியையே ஏற்படுத்தியது. பழைய ஓய்வூதிய திட்டம் தான் வேண்டும் என்பது இன்றும் பலரின் கோரிக்கை.

த.வெ.க., தனது தேர்தல் அறிக்கையில் அது குறித்து பரிசீலனை செய்வதாக கூறியிருந்தது பல அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மத்தியில் அது வரவேற்பை பெற்றது.

மேலும் தொடர்ந்து உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள், இன்னும் பல்வேறு முகாம்களை நடத்தி அலுவலர்களை வதைத்ததாலும் பலர் வெறுப்பில் தி.மு.க., அரசுக்கு எதிராக ஓட்டளித்துள்ளனர்.

த.வெ.க., அ.தி.மு.க.,வுக்கு அதிகரித்த தபால் ஓட்டு அரசு ஊழியர்களின் எதிர்ப்பு மனநிலையை காட்டுகிறது. மேலும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் என பலர் த.வெ.க., வுக்கு ஓட்டளித்துள்ளனர்.

ஆட்சி முடியும் தருவாயில் தொடர்ந்து ரேஷன் ஊழியர் சங்கம், வருவாய்த்துறை சங்கங்களின் வேலை நிறுத்த போராட்டம், இடைநிலை ஆசிரியர்களின் தொடர் கோரிக்கையான சம வேலைக்கு சம ஊதியம், காலிப்பணியிடங்களை நிரப்பாததால் அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம் ஆகியவை தி.மு.க.,விற்கு எதிரான மனநிலையை அதிகரித்துவிட்டன.

Advertisement