மக்கள் மாற்றத்திற்காக ஓட்டளித்துள்ளனர்: சொல்கிறார் எச்.ராஜா
காரைக்குடி: மக்கள் மாற்றத்திற்காக ஓட்டளித்திருக்கிறார்கள்'' என பா.ஜ., முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்தார்.
காரைக்குடியில் அவர் கூறியதாவது: 5 மாநில தேர்தல்களில் பா.ஜ., 3 மாநிலங்களில் முழுப் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது. மேற்கு வங்கத்தில் ஆட்சி அமைத்தது சாதனை.
தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் ஒழிக்கப்பட வேண்டிய சக்திகள் ஒழிக்கப்பட்டுள்ளது. சீமானின் நா.த.க., ஏற்கனவே இதே நிலையில் தான் இருந்தது. அதைப் பற்றி புதிதாக சொல்ல ஒன்றுமில்லை. ஒரு மாற்றத்திற்காக மக்கள் ஓட்டளித்திருக்கிறார்கள்.
தி.மு.க., - அ.தி.மு.க., இல்லாத ஒரு கட்சி தமிழகத்திற்கு அவசியம் என மக்கள் உணர்ந்து இருக்கிறார்கள். 5 அல்லது 6 சீட் என்பது தொங்கு சட்டசபைக்கு வழிவகுக்காது.
இந்த அரசை கவிழ்க்கும் தைரியம் தி.மு.க.,, மற்ற கட்சிக்கும் கிடையாது. தொங்கு சட்டசபை என்று எடுத்துக் கொள்வதை விட த.வெ.க., ஆதரவு சட்டசபை என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும். தமிழகத்திற்கு மத்திய அரசின் முழு ஆதரவு உண்டு என்றார்.
Advertisement
தமிழ்நாடு பாஜகவின் எதிர்காலம் கருத்தில் கொண்டு அதன் அமைப்பை முழுமையாக கலைக்க வேண்டும் புதிதாக இளம் ரத்தங்களுக்கு பொறுப்பு கொடுக்கவேண்டும் பழைய பொறுப்புகளில் சுகம் அனுபவித்தவர்களை ஓரம் கட்ட வேண்டிய தருணம் இது அண்ணாமலை போன்றவர்களுக்கு தமிழகத்தில் பொறுப்பான அதே நேரம் யார் தலையீடு இல்லாமல் உயர்ந்த பதவியை கொடுக்க வேண்டும்.... நல்லது நடக்கும்
ஹ.ராஜா தேர்தலில் நின்று இருந்தால் ஜெயித்து இருப்பார். ட்ரை நெக்ஸ்ட் time.

மாற்றம் என்பது சங்கிகளின் ரூபத்தில் தமிழகத்தில் வேண்டாம் என்றே தமிழக மக்கள் முடிவெடுத்துள்ளனர் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்...