பா.ஜ., - அ.ம.மு.க., சார்பில் வென்றவர்களுக்கு த.வெ.க., வலை
சென்னை: தமிழகத்தில் ஆட்சி அமைக்க, அ.ம.மு.க., - பா.ஜ., சார்பில் வெற்றி பெற்றவர்களின் ஆதரவை பெற, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பேச்சு நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சட்டசபை தேர்தலில், த.வெ.க., 108 தொகுதிகளில் வெற்றி பெற்று, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. அக்கட்சி ஆட்சி அமைக்க, இன்னும் 11 பேர் ஆதரவு தேவை. எனவே, காங்கிரஸ் - பா.ம.க., - வி.சி.க., - கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் ஆதரவு கேட்டு, த.வெ.க., நிர்வாகிகள் பேச்சு நடத்தி வருகின்றனர்.
பா.ஜ., சார்பில், ஊட்டியில் போஜராஜன் வெற்றி பெற்றுள்ளார். அ.ம.மு.க., சார்பில், மன்னார்குடி தொகுதியில் காமராஜ் வெற்றி பெற்றுள்ளார்.
இவ்விருவரின் ஆதரவை பெற, த.வெ.க., தரப்பில் பேச்சு நடந்தப்பட்டுள்ளது. இருவரும் கட்சி தலைமையிடம் பேசும்படி கூறியதாகவும், தொடர்ந்து பேச்சு நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்