உதயநிதி முதல்வராக முடியாது: பீயூஷ் கோயல்
சென்னை : ''உதயநிதி முதல்வராக முடியாது. தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும்,'' என, மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல் தெரிவித்தார்.
சென்னையில் அவர் அளித்த பேட்டி: பிரதமர் நரேந்திர மோடி மனதள்வில் தொண்டராகவே இருக்கிறார். அவர், மக்களின் இதயங்களை வெல்வது எப்படி, சமூகத்தின் பல்வேறு தரப்பினரை சென்றவடைவது எப்படி, தமிழக மக்களுக்கு சேவை செய்வது எப்படி என்பது குறித்து, என்னைப் போன்ற பா.ஜ.,வின் லட்சோப லட்சம் தொண்டர்களுக்கும் வழிகாட்டுகிறார். ஊழல் நிறைந்த தி.மு.க, அரசு, இந்த தேர்தலில் தோற்கடிக்கப்படும். உதயநிதி, தமிழக முதல்வராக முடியாது.
தமிழுக்கு எதிரானவர்; மக்களுக்கு எதிரானவர், பெண்களுக்கு எதிரானவர். அதனால் அவர், முதல்வராக முடியாது. அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தலைமையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்ததும், மக்களுக்கு நல்ல நிர்வாகம் வழங்கப்படும். மத்திய அரசுடன் இணைந்து செயலாற்றி, மத்திய அரசின் திட்டங்கள் தமிழக மக்களுக்கு வழங்கப்படும்.
விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறுவர். காங்கிரஸ் - தி.மு.க., தோல்விக்கான கூட்டணி. தமிழகத்தில் தே.ஜ., கூட்டணி வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்