Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் வானதி 

 மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் வானதி 

கோவை: உடல்நலக் குறைவு காரணமாக, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோவை வடக்கு தொகுதி வேட்பாளரும், பா.ஜ., - எம்.எல்.ஏ.,வுமான வானதி நேற்று வீடு திரும்பினார்.

அவர், தொண்டாமுத்துார் அருகே உள்ள உலியம்பாளையத்தில் உள்ள தன் பெற்றோர் வீட்டிற்கு சென்றார்.

அங்கு, அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஆரத்தி எடுத்து, திருஷ்டி கழித்து வீட்டிற்குள் அழைத்து சென்றனர்.

தேர்தல் பிரசாரத்தின் போது, திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், அவர் பூரண நலம் பெற வேண்டி அவரது குடும்பத்தினர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

இதைத் தொடர்ந்து, தேர்தல் பிரசாரத்துக்காக இன்று பிரதமர் மோடி கோவை வருகிறார். அந்த பிரசார கூட்டத்தில் வானதி கலந்து கொள்கிறார்.

Advertisement