Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 பழனிசாமிக்கு மா.கம்யூ., சாபம்

 பழனிசாமிக்கு மா.கம்யூ., சாபம்

அரூர்: ''எதிர்க்கட்சி தலை வர் அந்தஸ்தையும் பழனிசாமி இழப்பார்,'' என, மா.கம்யூ., அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

தர்மபுரி மாவட்டம், அரூர் தொகுதியில் பிரசாரம் செய்த அவர் பேசியதாவது: தி.மு.க., கூட்டணியை, 21க்கும் மேற்பட்ட கட்சிகளை இணைத்து உருவாக்கியிருக்கிறோம். பல தேர்தல்களில் வெற்றி பெற்ற இக்கூட்டணி, 2026 தேர்தலிலும் வெற்றி பெறும். தேர்தலுக்கு பின், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்தையும் இழப்பார்.

மத்தியில், பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வரும்போது காஸ் சிலிண்டர் விலை 380 ரூபாயாக இருந்தது. இன்று, 1,200 ரூபாய்க்கு விற்கின்றனர். தேர்தல் முடிந்ததும், சிலிண்டர் விலை மேலும் உயரும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement