Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


2 தொகுதிகளில் விஜய் வெற்றி; ஒன்றில் இடைத்தேர்தல் உறுதி

2 தொகுதிகளில் விஜய் வெற்றி; ஒன்றில் இடைத்தேர்தல் உறுதி
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை: இரண்டு தொகுதிகளில் விஜய் வெற்றி பெற்றுள்ளதால், ஒரு தொகுதியில் இடைத்தேர்தல் உறுதி செய்யப்பட்டு உள்ளது.

திருச்சி கிழக்கு, பெரம்பூர் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் த.வெ.க., தலைவர் விஜய், போட்டியிட்டார். இத்தொகுதிகளில் தலா ஒரு நாள் மட்டுமே அவர் பிரசாரம் செய்தார். பெரம்பூர் தொகுதியில் தேர்தல் பணிமனையை பார்வையிட்டு, விசில் கோலம் போட்டு சென்றார்.

தொகுதி முழுதும் வராமலே, அவர் பிரமாண்ட வெற்றியை பதிவு செய்துள்ளார். பெரம்பூர் தொகுதியில், 44,583 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் விஜய் வெற்றி பெற்றார். திருச்சி கிழக்கு தொகுதியில், 26,000 ஓட்டுகள் வித்தியாசத்தில், அவர் வெற்றி பெற்றுள்ளார்.

ஒருவரால் ஒரு தொகுதி எம்.எல்.ஏ.,வாக மட்டுமே இருக்க முடியும். எனவே, திருச்சி கிழக்கு அல்லது பெரம்பூர் ஆகிய இரண்டு தொகுதிகளில், ஏதாவது ஒன்றை அவர் ராஜினாமா செய்ய உள்ளார். அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடப்பது உறுதியாகி உள்ளது. ஆனால், அது எந்த தொகுதி என்பது தெரியவில்லை.

மயிலம் தொகுதிக்கும் இடைத்தேர்தல்?

இதேபோல, அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி.,யாக உள்ள சி.வி.சண்முகம், மயிலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அ.தி.மு.க., ஆட்சி அமைத்திருந்தால், அமைச்சராக அவர் பொறுப்பேற்று இருக்கக்கூடும். அ.தி.மு.க., மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டதால், அமைச்சராகும் வாய்ப்பு பறிபோயுள்ளது.

இதனால், தன் எம்.எல்.ஏ., பதவியை அவர் ராஜினாமா செய்துவிட்டு, டில்லி அரசியலில் தொடரும்பட்சத்தில், மயிலம் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடக்க வாய்ப்புள்ளது.

Advertisement