Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 சென்னை இனி தி.மு.க., கோட்டை இல்லை

 சென்னை இனி தி.மு.க., கோட்டை இல்லை
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை: எம்.ஜி.ஆர்., காலத்தில் கூட, சென்னை மாவட்டத்தை தன் கோட்டையாக தக்க வைத்திருந்த தி.மு.க., தற்போது, அதை விஜயிடம் பறிகொடுத்துள்ளது.

அ.தி.மு.க.,வை துவக்கிய எம்.ஜி.ஆர்., ஆட்சியை பிடித்த போதிலும், சென்னையில் உள்ள சட்டசபை தொகுதிகளில், அவரால் வெற்றி பெற முடியவில்லை. தி.மு.க., தான் தொடர்ந்து, சென்னை தொகுதிகளில் வெற்றி பெற்று வந்துள்ளது.

கடந்த, 2016ல் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, அந்தாண்டில் நடந்த சட்டசபை தேர்தலில், சென்னையில் உள்ள, 16 தொகுதிகளில், 10ல் தி.மு.க., வெற்றி பெற்றது. 2021 சட்டசபை தேர்தலில், சென்னையில் அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகளே வெற்றி பெற்றன.

'எம்.ஜி.ஆர்., காலம் முதல் சென்னை எங்கள் கோட்டையாகவே திகழ்கிறது; இந்த தேர்தலிலும், சென்னையில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்று அதை மீண்டும் நிரூபிப்போம்' என, தி.மு.க.,வினர் தெரிவித்தனர்.

ஆனால், முதல்வர் ஸ்டாலின் கடந்த மூன்று தேர்தல்களில் வெற்றி பெற்ற கொளத்துாரில், இந்த தேர்தலில் த.வெ.க., வேட்பாளர் வி.எஸ்.பாபுவிடம் தோல்வி அடைந்துள்ளார். சேப்பாக்கம் திருவல்லிக்கேணி மற்றும் துறைமுகம் ஆகிய இரு தொகுதிகளில் மட்டுமே, தி.மு.க., வெற்றி பெற்றுள்ளது. மற்ற அனைத்து தொகுதிகளிலும் த.வெ.க.,வே வெற்றி பெற்றுள்ளது.

எம்.ஜி.ஆர்., காலத்திலும் சென்னையை கோட்டையாக தக்க வைத்த தி.மு.க.,வால், இப்போது அது முடியாமல் போய் விட்டது.

Advertisement

மே 05, 2026 08:47 pm

தி மு க இனிமேல் நீர்த்து போன கட்சி ஆகி விடும். இந்த 21 ம் நூற்றாண்டில் செயற்கை நுண்ணறிவு காலத்தில் இனம் மொழி மதம் மற்றும் பெரியார், கலைஞர் என்றெல்லாம் மக்கள் தலையில் மிளகாய் அரைக்க முடியாது.

Reply Rate this
மே 05, 2026 10:16 am

கோட்டையா? இனிமே பேட்டை கூட இல்லை

Reply Rate this
மே 05, 2026 07:40 am

இது ஒரு மாயை நிரந்தரம் இல்லை இதற்கு பல உதாரணங்கள் உள்ளன....

Reply Rate this
மே 05, 2026 07:37 am

இது போல் முன்பும் நடந்து உள்ளது
மீண்டும் திமுக வெற்றி பெற்ற வரலாறு உண்டு

Reply Rate this
திமுக படு தோல்வி அடைந்த வரலாறும் உண்டு முருகா
மே 05, 2026 08:10 am
Rate this
முதல்வருக்கு அவரது தொகுதியில் ஆப்பு வைத்த வரலாறு உண்டா முருகா
மே 05, 2026 08:12 am
Rate this
மே 05, 2026 05:43 am

சென்னைல பெரிய ஓட்டை திமுகவுக்கு ...

Reply Rate this