நல்லாட்சி தொடர உதயசூரியனுக்கு ஓட்டு தி.மு.க, வேட்பாளர் நித்யா சுகுமார் பிரசாரம்
காஞ்சிபுரம்: ''தி.மு.க.,வின் நல்லாட்சி தொட உதயசூரியன் சின்னத்திற்கு ஓட்டளியுங்கள்,'' என, காஞ்சிபுரம் சட்டசபை தொகுதி, வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில், காஞ்சிபுரம் தி.மு.க., வேட்பாளர் நித்யா சுகுமார் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், காஞ்சிபுரம் சட்டசபை தொகுதியில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர் நித்யா சுகுமார், கூட்டணி கட்சியினருடன் தொகுதி முழுதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
பிரசாரத்திற்கு செல்லும் இடங்களில் தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சியினர், கட்சி சார்பற்ற பெண்கள், தி.மு.க., வேட்பாளர் நித்யா சுகுமாருக்கு, உற்சாகமாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.
நேற்று காஞ்சிபுரம் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழம்பி, சிறுகாவேரிபாக்கம், கருப்படிதட்டடை, கோனேரிகுப்பம் உள்ளிட்ட கிராமங்களில், கூட்டணி கட்சி பிரமுகர் களுடன் உதயசூரியன் சின்னத்திற்கு ஓட்டுகேட்டு தீவிர பிரசாரம் செய்தார்.
இதில், சிறுகாவேரிபாக்கம் ஜெகதீஸ்வரி மாரியம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தபின், பிரசாரத்தை தொடங்கிய தி.மு.க., வேட்பாளர் நித்யா சுகுமாருக்கு, கிராமத்தினர், பொக்லைன் இயந்திரம் மூலம் மெகா சைஸ் ரோஜாப்பூ மாலை அணிவித்தும்,வழிநெடுகிலும் பெண்கள் மலர் துாவியும், ஆரத்தி எடுத்தும் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
''விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரவும், தமிழகம் தலைநிமிர்ந்து நிற்கவும், தி.மு.க.,வின் நல்லாட்சி தொடர உதய சூரியன் சின்னத்திற்கு ஓட்டளியுங்கள்,'' என, நித்யா சுகுமார் பிரசாரம் செய்தார்.
இதில், ஒன்றிய செயலர் குமார், வி.சி.க., மாவட்ட செயலர் அருள்நாதன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்