Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


போட்டியிடும் தொகுதிகள் எவை? தி.மு.க., கூட்டணியில் ஜவ்வு

போட்டியிடும் தொகுதிகள் எவை? தி.மு.க., கூட்டணியில் ஜவ்வு

- நமது நிருபர் -

தி.மு.க., கூட்டணியில், தி.மு.க., விரும்பும் தொகுதிகளை காங்கிரசும்; அக்கட்சி கேட்கும் தொகுதிகளை தே.மு.தி.க.,வும் விரும்புவதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

கடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற ஓரிரு தொகுதிகளை, மார்க்சிஸ்ட் கம்யூ., கேட்பதாலும் இழுபறி நீடிக்கிறது.

தி.மு.க., கூட்டணியில், 28 தொகுதிகள் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த தேர்தலில், காங்கிரஸ் வென்ற 17 தொகுதிகளில் விருத்தாசலம், தென்காசி ஆகிய தொகுதிகளை தி.மு.க., ஒதுக்கவில்லை; மற்ற 15 தொகுதிகளையும் ஒதுக்கியுள்ளதாக தெரிகிறது.

விருத்தாசலம் தொகுதியில், தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா போட்டியிட விரும்புவதால், அத்தொகுதியை காங்கிரஸ் விட்டுக் கொடுத்துள்ளது.

தென்காசியில், முன்னாள் மாவட்ட தி.மு.க., செயலர் பத்மநாபன் போட்டியிட விரும்புவதால், அத்தொகுதியையும் காங்., விட்டுக் கொடுத்துள்ளது. தென்காசிக்கு பதிலாக காங்கிரசுக்கு கடையநல்லுார் தொகுதி ஒதுக்கப்படுகிறது.

நாங்குநேரி தொகுதியில், தி.மு.க., சார்பில் கிரகாம்பெல் போட்டியிட விரும்பிய போதிலும், காங்கிரஸ் விட்டுக் கொடுக்க விரும்பவில்லை. இப்படி தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்றுள்ள மற்ற கட்சிகளும் தொகுதிக்கு மல்லுகட்டுவதால் இழுபறி நீடிக்கிறது.

Advertisement