என்னது... அவிநாசியில் தனபால் போட்டியா? விக்கிபீடியா தகவல்: அ.தி.மு.க.வுக்கு தலை சுற்றல்
திருப்பூர்: தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு போன்ற தேர்தல் பணிகள் சுறுசுறுப்பாக நடந்து வருகிறது. த.வெ.க.வுடன் எந்த கட்சியும் கூட்டணி சேராத நிலையில், வேட்பாளர் தேர்வில் அக்கட்சி தலைவர் விஜயும் வேகம் காட்டி வருகிறார். இதில், 234 தொகுதிகளுக்கும், அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அதிகாரபூர்வமாக வேட்பாளர்களை அறிவித்திருக்கிறார்.
இந்நிலையில், அரசியல் கட்சிகளை சேர்ந்த தேர்தல் வியூக வகுப்பாளர்கள், ஆலோசகர்கள், அரசியல் விமர்சகர்கள், செய்தியாளர்கள் பலரும், முந்தைய ஆண்டுகளில் நடந்த தேர்தல் குறித்த புள்ளி விவரங்களை வீக்கிபீடியா தளத்தில் தான் தேடுவர். அதற்கேற்ப விக்கிபீடியாவில், இதுவரை நடந்த தேர்தல் தொடர்பாக தொகுதி வாரியான விவரம், விளக்கமாக இடம் பெற்றிருக்கும்.
அவ்வகையில், அடுத்த மாதம் நடக்கவுள்ள, ஆண்டு தேர்தலில் தொகுதி வாரியாக போட்டியிடும் அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள், மொத்த வாக்காளர் விவரம் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு தொகுதியிலும் நாம் தமிழர் கட்சி சார்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் பெயர் இடம்பெற்றிருக்கிறது. அவிநாசி தொகுதிக்கு, நா.தக. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மேனகா பெயர் இடம் பெற்றிருக்கிறது. அதோடு, அ.தி.மு.க. சார்பில் தனபால் பெயர் இடம் பெற்றிருக்கிறது. சிட்டிங் எம்.எல்.ஏ.வான இவர், முன்னாள் சபாநாயகர்.
'உடல் நலன் கருதி, இம்முறை தேர்தலில் தாம் சீட் கேட்க போவதில்லை,' என, ஏற்கனவே, அவர் கூறியிருந்தார். சமீபத்தில் தான் இவரது மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன், த.வெ.க.வில் இணைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், விக்கிபீடியா தகவல், அரசியல் கட்சியினர் மற்றும் தேர்தல் விமர்சகர்கள், வியூக வகுப்பாளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
அவிநாசி வட்டார அ.தி.மு.க.வினர் கூறுகையில், 'கொங்கு மண்டலத்தில், அவிநாசி அ.தி.மு.க. கோட்டையாகவே இன்றளவும் இருந்து வருகிறது. வரும் தேர்தலில், தே.ஜ.கூட்டணியில், எங்கள் கட்சிக்குத்தான் ஒதுக்க வேண்டுமென தலைமையிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அதுபற்றிய தெளிவான தகவல் இல்லாத நிலையில், 'விக்கிபீடியா'வில், தனபால் வேட்பாளர் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே, தொகுதி கூட்டணி கட்சிக்கு போய் விடுமோ என்ற தவிப்பில் நாங்கள் உள்ள நிலையில், இது அதிர்ச்சியை அளித்துள்ளது,' என்றனர்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்