Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


பாஜ வேட்பாளர் பட்டியல் எப்போது: நயினார் நாகேந்திரன் தகவல்

பாஜ வேட்பாளர் பட்டியல் எப்போது: நயினார் நாகேந்திரன் தகவல்
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நாளை சென்னை வருகிறார். அதன் பிறகு முடிவெடுத்து பாஜ., வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்

சென்னையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நாளை சென்னை வருகிறார். அதன் பிறகு முடிவெடுத்து வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும். இதில் காலதாமதம் இல்லை. இதனால்பாதிப்பும் இல்லை. பிரதமர் சென்னை வந்து புதுச்சேரி செல்கிறார். கட்சியின் தலைவர்கள் பிரதமரை சந்திப்பார்கள். விரைவில் பாஜ தேர்தல் அறிக்கை வெளியாகும்.

திமுக பிரசார பாடல் வரிகள் உண்மையாக இருக்க வேண்டும். பழைய தேர்தல் அறிக்கையில் உள்ளவற்றை நிறைவேற்றி இருக்க வேண்டும். நல்ல ஆட்சி நடத்தியிருக்க வேண்டும். மாநிலத்தில் கஞ்சா இல்லாமல் இருக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு நன்றக இருக்க வேண்டும். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஆட்சி நடக்கிறது.

தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கஞ்சா பயன்பாடு இருக்கிறது. திமுகவின் தேர்தல் அறிக்கை ஹீரோ அல்ல ஜீரோ. இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.

Advertisement

ஏப் 02, 2026 11:33 pm

பாவகாவையும் காங்கிரசையும் துரத்திவிட்டால் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி மலரும்.

Reply Rate this
ஏப் 02, 2026 10:20 pm

அண்ணாமலை அவர்கள் இந்த தேர்தலில் வெற்றி பெறக்கூடாது என்ற நோக்கத்தில் வேலை நடந்து கொண்டிருக்கிறது. அதற்கு பாஜகவில் உள்ள நான்கு பேர், நயினார் உட்பட திட்டம் தீட்டி செயல்படுகிறார்கள்

Reply Rate this
ஏப் 02, 2026 10:17 pm

தாம்பரம் ரயில் சோதனை விஷயத்தினை மூடி மறைக்க தலைமையாக வைத்தவரால் தேர்தலை சந்திக்க முடியுமா?

Reply Rate this
ஏப் 02, 2026 08:38 pm

சூப்பர் காமெடியன் .

Reply Rate this
ஏப் 02, 2026 08:36 pm

யாரும் கவலைப்பட வேண்டாம், பிஜேபியை நன்கு புரிந்து கொண்டவர்களுக்கு அவர்களின் அர்ப்பணிப்பு, கட்டுப்பாடு மற்றும் நோக்கம் பற்றி தெளிவாக தெரியும்.

தமிழ்நாட்டில் உள்ள மக்களின் மனம் இன்னும் பக்குவப்படவில்லை, நம்பிக்கையுடன் எதிர்பாருங்கள்.

Reply Rate this
பா.ஜ.க., தொண்டர்களும் தமிழக வாக்களர்களும் பா.ஜ.க., வையும் ஆர் எஸ் எஸ் யும் புரிந்து கொண்ட அளவிற்கு தமிழக பா.ஜ.க., வில் தீடீர் தலைவர்களாக ஐக்கியம் ஆனவர்களுக்கு புரிதல் இல்லை.
ஏப் 02, 2026 10:51 pm
Rate this
ஏப்ரல் ஏழாம் தேதி பாஜக லிஸ்ட் ரிலிஸ் ஆகலாம்
ஏப் 03, 2026 11:34 am
Rate this
ஏப் 02, 2026 08:09 pm

நீங்க வெளியிடவே வேண்டாம். அமித் ஷா மேற்கு வங்கத்திற்கு சென்று விட்டார். மீண்டும் திமுக ஆட்சி தான் தமிழகத்தில் என்று சூசகமாக தெரிவிக்கிறாரா ?

Reply Rate this
ஏப் 02, 2026 07:47 pm

ஏப்ரல் 23ஐ தாண்டாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

Reply Rate this
ஏப் 02, 2026 07:44 pm

நாளை என்பதை இன்றே செய்.. இன்றே என்பதை இப்போதே செய்.. தள்ளிப்போடும் செயலெல்லாம் தளர்வின் அறிகுறிகள்.. இப்படித் தள்ளிப்போடுவதென்பது கட்சிக்குள் இருக்கும் குழப்பங்களை தெளிவாக வெளிச்சம் போடுகின்றன. இபிஎஸ் ஸோடு பேச்சு வார்த்தையில் எந்த வித சாதகத் தொகுதிகளும் கிடைக்கவில்லை. இப்போது கிடைத்தத் தொகுதிகளுக்குள் வேட்பாளர்களை அறிவிப்பதில் இத்தனைத் தயக்கம் என்பது எதிரிக் கட்சிகளுக்குச் சாதகமே.. பாஜகவின் மெத்தனம் சலிப்பையே தருகிறது.. ஒருவேளை மோடிக்கு இந்த முறை மேற்கு வங்கம் மட்டும்தான் குறியோ?

Reply Rate this
ஏப் 02, 2026 07:40 pm

28 தொகுதிகளுக்கு வேட்பாளர் அறிவிக்க முடியவில்லை இதில் ஆட்சியை பிடிக்கும் கனவு வேறு . வெட்கக்கேடு

Reply Rate this
ஏப் 02, 2026 06:57 pm

2031 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன் வெளியிடுவார்கள் என்று நம்புவோம்!

Reply Rate this