Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


உதயநிதி சொத்து மதிப்பு ரூ.20 கோடி

உதயநிதி சொத்து மதிப்பு ரூ.20 கோடி
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை:துணை முதல்வர் உதயநிதிக்குகு ரூ.12.92 கோடிக்கு அசையும் சொத்தும், ரூ.7.72 கோடிக்கு அசையா சொத்தும் உள்ளது.
சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ள துணை முதல்வர் உதயநிதி, அத்துடன் சொத்து குறித்த பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளார்.அதில் கூறப்பட்டுள்ளதாவது:

உதயநிதியிடம் கையிருப்பில் ரூ.50 ஆயிரமும் மனைவி கிருத்திகாவிடம் ரூ.75 ஆயிரம் ரொக்கமாகவும் உள்ளது.

உதயநிதிக்கு சென்னை டிடிகே சாலையில் மெர்க்கன்டைல் வங்கி, ஹிபிபுல்லா சாலையில் உள்ள ஆக்சிஸ் வங்கி, டிடிகே சாலையில் உள்ள தமிழ் நாடு மெர்க்கண்டைல் வங்கியில் தேர்தல் செலவுக்காக துவக்கபபட்ட வங்கிக்கணக்கு என 3 வங்கிக்கணக்குகள் உள்ளன. அதில் சுமார் ரூ.33 லட்ச ரூபாய் உள்ளது.

முதலீடு

பிர்லா சன் லைப் இன்சூரன்ஸ், கோட்டக் லைப், இன்சூரன்ஸ், எல்ஐசி இன்சூரன்ஸ் ஆகியவற்றில் உதயநிதி மொத்தம் ரூ.13.61 லட்சம் முதலீடு செய்துள்ளார்.
ஆதித்யா பிர்லா கேரண்டீடு, டிரடிஷ்னல் பிளான், கோட்டக் லைப் இன்சூரன்ஸ் ஆகியவற்றில் கிருத்திகா ரூ.15.22 லட்சம் முதலீடு செய்துள்ளார்.

கடன்

ஸ்நோ அவுசிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு ரூ.10 கோடியும், நடிகர் சங்கம் அறக்கட்டளைக்கு ரூ.1 கோடியும் உதயநிதி கடன் கொடுத்துள்ளார். ஸ்நோ ஸ்போர்ட்ஸ் பிரமோஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு கிருத்திகா ரூ.4.65 லட்சம் கடன் கொடுத்துள்ளார்.

வாகனம்

உதயநிதியிடம் ரூ.1 கோடி மதிப்புள்ள டிபென்டர் மற்றும் ரூ.23 லட்சம் மதிப்புள்ள இன்னோவா கார் உள்ளன. மனைவியிடம் வாகனம் ஏதும் இல்லை.
உதயநிதியிடம் தங்கம், வெள்ளி இல்லை. கிருத்திகாவிடம் ரூ.1.87 கோடி மதிப்புள்ள 1600 கிராம் பழைய தங்க நகை உள்ளது.

உதயநிதியின் மொத்த அசையும் சொத்தின் மதிப்பு ரூ.12.92 கோடி.
அசையா சொத்தின் மதிப்பு ரூ.7.72 கோடி.( திருவள்ளூர் மாவட்டம் உளூந்தை கிராமத்தில் மொத்தம் 10.47 ஏக்கர் நிலம் உள்ளது. மேலும், ராயப்பேட்டை, பள்ளிக்கரணையில் குடியிருப்பு உள்ளது) .

கிருத்திகாவின் மொத்த அசையும் சொத்தின் மதிப்பு ரூ.13.25 கோடி ஆகும். அவரிடம் அசையா சொத்து எதுவும் இல்லை.

வழக்கு

உதயநிதி மீது உ.பி., பீஹார், மகாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு வழக்கு உள்ளிட்ட மொத்தம் 10 வழக்குகள் நிலுவையில் உள்ளது.


குறைவு

உதயநிதி கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட போது தனது சொத்து மதிப்பு ரூ.27 கோடி என கணக்கு காட்டி னார். ஆனால், இந்த முறை அவரது சொத்துக்கணக்கில் ரூ. 7 கோடி குறைந்துள்ளது.

ஆனால், 2021 தேர்தலின் போது மனைவி கிருத்திகா பெயரில் ரூ.1.15 கோடி சொத்து இருந்ததாக உதயநிதி கூறியிருந்தார். இந்த முறை அவரது சொத்து மதிப்பை ரூ.13.25 கோடி அளவுக்கு கணக்கு காட்டி உள்ளார். மனைவியின் சொத்து மதிப்பு 10 மடங்கு அதிகரித்துள்ளது.

மேலும், கடந்த 2021ம் ஆண்டு ரெட்ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தில் ரூ.7.3 கோடி முதலீடு செய்து இருந்ததாக தனது அசையும் சொத்து விபரத்தில் தெரிவித்து இருந்தார். ஆனால், இந்த முறை அப்படி ஏதும் இல்லை. ஆனால், கிருத்திகா, ரூ.2.63 கோடி முதலீடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Advertisement