Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


வீட்டிற்குள் நடந்த விசில் புரட்சி; பிரசார பீரங்கியான குழந்தைகள்

வீட்டிற்குள் நடந்த விசில் புரட்சி; பிரசார பீரங்கியான குழந்தைகள்
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

கோவை: தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு இணையான கட்டமைப்பே இல்லாமல், சட்டசபை தேர்தலில் த.வெ.க., வெற்றி பெற்றதற்கு, சத்தமே இல்லாமல் வீட்டிற்குள் நடைபெற்ற பிரசாரங்களே காரணமாகியுள்ளன.

''சட்டசபை தேர்தல் முடிவுகளில் அதிசயம் நடக்க போகிறது,'' என, த.வெ.க., நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கூறியிருந்தார். அவர் சொன்னதை போலவே தமிழக அரசியலில் அதிசயம் நிகழ்ந்துவிட்டது. தேர்தலுக்கு முன்பாக, த.வெ.க., இத்தனை பெரிய வெற்றியை பெறும் என யாருமே கூறவில்லை.

தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு இணையான கட்சி கட்டமைப்பு கூட, த.வெ.க.,வுக்கு இல்லை. தி.மு.க., - அ.தி.மு.க., நிர்வாகிகள், வீடு வீடாக சென்று பிரசாரம் செய்தனர். த.வெ.க.,வினருக்கு வீடு வீடாக பிரசாரம் செய்யுமளவுக்கு பூத் கமிட்டி கூட இல்லை. அந்த கட்சி தலைவர் விஜய்யும் 'லீவ்' விட்டு மிகவும் 'ஹாயாக' பிரசாரம் செய்தார்.

ஆனால், த.வெ.க.,வுக்காக ஒவ்வொரு வீட்டில் இருப்போரும், வீட்டுக்குள்ளேயே விசிலுக்காக பிரசாரம் செய்தனர். குறிப்பாக, குழந்தைகளும் விஜய்க்கு பிரசார பீரங்கியாக மாறினர். 'இந்த முறை த.வெ.க.,வுக்கு ஓட்டு போட வேண்டும்' என, பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் பிரசாரம் செய்தனர்.

தங்கள் குழந்தைகளின் பேச்சை தட்டமுடியாமல், விசில் சின்னத்திற்கு பலரும் ஓட்டளித்தனர். இதையடுத்தே, த.வெ.க.,வுக்கு நிறைய ஓட்டுகள் கிடைத்ததாக, அக்கட்சியினர் கூறுகின்றனர்.

Advertisement