Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 ஓசூர் சென்டிமென்ட் உடைக்கும் ஸ்டாலின்?

 ஓசூர் சென்டிமென்ட் உடைக்கும் ஸ்டாலின்?
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

கி ருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை, பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி, ஓசூர், தளி தொகுதி, தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை 4:00 மணிக்கு, தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேச உள்ளார். அதற்காக, வேப்பனஹள்ளி தொகுதிக்கு உட்பட்ட கோபசந்திரம் தட்சிண திருப்பதி கோவில் அருகே இடம் தேர்வு செய்யப்பட்டு, மேடை அமைக்கும் பணிகள் நடந்தன.

இந்நிலையில், ஓசூர் அந்திவாடி விளையாட்டு மைதானம் அருகே உள்ள காலி இடத்திற்கு பொதுக்கூட்டம் மாற்றப்பட்டுள்ளது. இதில், காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து, தி.மு.க.,வினர் கூறியதாவது:

ஓசூரில் இருந்து பொதுக்கூட்டம் நடக்கும் இடத்திற்கு, 25 கி.மீ., துாரத்திற்கு மேல் பயணிக்க வேண்டியிருப்பதால், ஓசூர் அந்திவாடி பகுதிக்கு பொதுக்கூட்டம் மாற்றப்பட்டுள்ளது.

ஓசூர் பகுதியில், முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் செய்த ஆண்டுகளில், வேட்பாளர்கள் வெற்றி, தோல்வியை தாண்டி, தி.மு.க., ஆட்சி அமைக்கவில்லை என்ற, 'சென்டிமென்ட்' உள்ளது. அதனால் தான், முதலில் வேப்பனஹள்ளி தொகுதியில் பொதுக்கூட்டம் நடப்பதாக இருந்தது. ஆனால், ஓசூர் சென்டிமென்டை மாற்ற வேண்டும் என்பதற்காக, ஓசூருக்கே பொதுக்கூட்டம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement

ஏப் 19, 2026 01:27 pm

மூட நம்பிக்கையில் மூழ்கிக் கிடக்க ஸ்டாலின் என்ன பாஜக தலைவரா?

Reply Rate this
ஏப் 19, 2026 12:32 pm

அப்புறம் எதுக்கு தஞ்சை கோவில் ஓவியத்தை துணி போர்த்தி மூடி வெச்சீங்க???? மக்கள் கேப்பம்ல?

Reply Rate this

வேப்பனஹள்ளியா இருந்தா என்ன? ஓசூரா இருந்தா என்ன? ரிசல்ட் என்னவோ முட்டைதான்

Reply Rate this
ஏப் 19, 2026 08:22 am

எப்படியும் எழுதிகொடுத்ததைபேசப்போகிறார் எங்கே பேசினால் என்ன

Reply Rate this
ஏப் 19, 2026 07:13 am

அவருக்கு ஓசூருக்கு ஸ்பெல்லிங்கே தெரியாது.. ஆனா இதுல செண்டிமெண்ட்ட மாத்தறாராம்..

Reply Rate this
ஏப் 19, 2026 05:48 am

பகுத்தறிவு ஓவரானால் இது போல சிந்திக்கத்தோன்றும்.

Reply Rate this