தாமரையை மலர வைக்க 'பெண் படை' வியூகம்
அவிநாசி தொகுதி பா.ஜ. வேட்பாளர் முருகனைப் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய, அக்கட்சியின் மகளிரணி தீவிரக் களப்பணியில் இறங்கியுள்ளது. அவிநாசி- - திருப்பூர் சாலையில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான பிரசார வியூகங்கள் வகுக்கப்பட்டன.
முன்னாள் மாவட்டத் தலைவர் சங்கீதா தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், நிர்வாகிகள் பிரியதர்ஷினி, ஜெகதீஸ்வரி, பிரதிமா, கஸ்துாரிபிரியா, தேன்மொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வெறும் நோட்டீஸ் கொடுப்பதோடு நின்றுவிடாமல், ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று இல்லத்தரசிகளிடம் பொறுமையாகப் பேசி, அவர்களின் ஆதரவைத் திரட்ட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. குறிப்பாக, முத்ரா கடன் உள்ளிட்ட மத்திய அரசின் பெண்களுக்கான திட்டங்களை விளக்கி, ஒட்டுமொத்தக் குடும்பத்தின் வாக்குகளையும் தாமரைக்கு உறுதி செய்ய வேண்டும் எனச் சங்கீதா வேண்டுகோள் விடுத்தார். 'வீடு வீடாக மகளிரணி' என்கிற இந்த வியூகம் அவிநாசி தேர்தல் களத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்