Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 நீங்க ஜெயிச்சுருவீங்க.. குடுகுடுப்பைக்காரர் கணிப்பு

 நீங்க ஜெயிச்சுருவீங்க.. குடுகுடுப்பைக்காரர் கணிப்பு

வேலுார் மாவட்டம், காட்பாடி சட்டசபை தொகுதியில், அமைச்சர் துரைமுருகனை எதிர்த்து இரண்டாவது முறையாக அ.தி.மு.க., சார்பில் ராமு போட்டியிடுகிறார். கடந்த முறை, 746 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை பறிகொடுத்தார். இந்த முறை, துரைமுருகனை வீழ்த்த காட்பாடி தொகுதியில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

குறிப்பாக, இறைச்சி கடைகளில் கறி வெட்டி கொடுப்பது, உருது மொழியில் பேசி ஓட்டு கேட்பது, சிலம்பம் சுற்றி ஓட்டுகள் கேட்பது போன்ற நுாதன முறைகளில் ஓட்டு சேகரித்து வந்தார். இந்நிலையில், குமரப்ப நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஓட்டு சேகரித்தார்.

இந்திரா நகர் பகுதியில் நுாற்றுக்கும் மேற்பட்ட குடுகுடுப்பைக்காரர்கள் வசிக்கின்றனர். அங்கு ராமு ஓட்டு சேகரிக்க சென்றபோது, அவர்களில் ஒருவர் குடுகுடுப்பை அடித்து, துரைமுருகன் தோல்வியடைய போவதாகவும், ராமு 25,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறார் எனவும் கூறினார். இந்த செய்தியால், ராமு மகிழ்ச்சியில் திக்குமுக்காடினார்.

Advertisement