'சொந்த ஊருக்கு வாங்க; ஓட்டு போட்டுட்டு போங்க'
சென்னையில் வசிக்கும் கன்னியாகுமரி, துாத்துக்குடி, நெல்லை, தென்காசி, ராமநாதபுரம், மதுரை என, தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களில் பெரும் பகுதியினர், சொந்த ஊரில் தான் ஓட்டு வைத்துள்ளனர்.
அவர்கள், உள்ளாட்சித் தேர்தலில் ஓட்டு போட ஆர்வமாக ஊருக்குச் சென்றாலும், லோக்சபா, சட்டசபை தேர்தல்களுக்கு ஓட்டு போட செல்வதில்லை.
இதனால், தென் மாவட்ட தொகுதிகளில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள், சென்னையில் வசிக்கும் தங்கள் தொகுதிக்குட்பட்ட வாக்காளர்களை, கிராமம் வாரியாக பட்டியலிட்டு, அவர்களின் முகவரி, மொபைல் போன் எண்களை சேகரித்துள்ளனர். அவர்களை தொடர்பு கொண்டு, தேர்தல் நாளன்று, சொந்த ஊருக்கு வந்து ஓட்டு போடுமாறு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
சொந்த ஊருக்கு வந்து செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து தருவதாகவும், வேட்பாளர்கள் உறுதி அளித்துள்ளனர்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்