/ இந்தமுறை ஓட்டு யாருக்கு / நான் முதல்வன் திட்டம் சூப்பர்

நான் முதல்வன் திட்டம் சூப்பர்

ச.தரணி, 25 தொளசம்பட்டி, சேலம்தி. மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட, 'நான் முதல்வன்' திட்டத்தில் போட்டித் தேர்வுக்கு ஆறு மாதங்கள் படித்தேன். அங்கு பயிற்சி வகுப்பு, விடுதி, கணினி, உணவு இலவசமாக கொடுத்து பயிற்சி அளித்தனர். இத்திட்டத்தில் பயிற்சி பெற்று, இரண்டு ஆண்டுகளில், 50க்கும் மேற்பட்டோர் மத்திய அரசின் யு.பி.எஸ்.சி., தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். எதிர்காலங்களில் ஆட்சிக்கு வருபவர்கள், இத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்த வேண்டும். இந்த ஆட்சியில் விளையாட்டு துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, இளைஞர்களை ஊக்குவிக்கின்றனர். 2021 - 2026 காலகட்டத்தில், மூன்று போட்டித்தேர்வுகள் மட்டும் நடத்தப்பட்டுள்ளன. போட்டித் தேர்வுகளை அதிகளவில் நடத்தி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும். தொளசம்பட்டிக்கு பஸ் வசதி குறைவாக உள்ளபோதும், மகளிர் விடியல் பஸ்கள் வாயிலாக தாரமங்கலம் அறிவுசார் மையம் சென்று போட்டித் தேர்வுக்கு படித்து வருகிறேன். பெண்களுக்கு அதிக முன்னுரிமை கொடுப்பதால், தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் இந்தமுறை ஓட்டு யாருக்கு