Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


நா.த.க.,வை இளைஞர்கள் கைவிட மாட்டோம்!

நா.த.க.,வை இளைஞர்கள் கைவிட மாட்டோம்!

எஸ்.முனீஸ்வரன், 27 மானாமதுரை

தி. மு.க., ஆட்சியில் எந்த வளர்ச்சியும் இல்லை. வெறும் கண் துடைப்பிற்கு திட்டங்களை அறிவித்து ஏமாற்றுகின்றனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அளவிற்கு, அ.தி.மு.க.,வில் வலுவான தலைவர்கள் இல்லை. அங்கு நடக்கும் கோஷ்டி பூசல் பிற கட்சிகளுக்கு சாதகமாக உள்ளது.

'இயற்கை வளங்களை பாதுகாப்போம்' என்ற நோக்கில், நா.த.க., தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. 234 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலில், நுாற்றுக்கணக்கான பெண்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இது, தமிழக அரசியலில் பெண்கள் முன்னேற்றத்திற்கான முதல் வெற்றி.

நடிகர் விஜயின் அரசியல் வருகையால், சீமானின் ஓட்டுகள் சிதறும் வாய்ப்புள்ளது. ஆனாலும், என் போன்ற இளைஞர்கள், சீமானை தவிர வேறு யாருக்கும் ஓட்டு போடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம். எனவே, நா.த.க.,வின் கொள்கையை மட்டுமே நம்பி ஆதரிப்பவர்களின் ஓட்டு சிதறாது.

மனிதர்களையே மதிக்காத அரசியல் கட்சிகளுக்கு மத்தியில், ஆடு,- மாடுகளுக்கு மாநாடு நடத்தியவர் சீமான். அவரின் கொள்கையை முழுதுமாக ஆதரிக்கிறேன். கடந்த தேர்தலில், நா.த.க.,வுக்கு தான் ஓட்டு போட்டேன். இம்முறையும் அந்த கட்சிக்கு தான் ஓட்டு.

Advertisement