/ இந்தமுறை ஓட்டு யாருக்கு / தேர்தலில் ஜாதி பார்ப்பதுதான் சமூகநீதியா?

தேர்தலில் ஜாதி பார்ப்பதுதான் சமூகநீதியா?

டி.மதிவாணன், 27 கம்பம், தேனிஊ ழல் அதிகரித்து விட்டது. கிராமப்புறங்களில் போதுமான பஸ் வசதி இல்லாமல், கல்லுாரி செல்வோர், வயதானோர் பாதிக்கப்படுகின்றனர். மக்களை, ஜாதி பார்த்து ஓட்டு போடும் நிலைக்கு தி.மு.க.,வினர் தள்ளி விட்டனர். சமூக நீதி பேசுவோர், ஏன் ஜாதி பார்த்து வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டும். தேர்தல் நேரத்தில் மட்டும் தான் தி.மு.க.,வினர் தீயாய் வேலை செய்கின்றனர். பிற நேரங்களில் யார் கண்ணிலும் படுவதில்லை. கடந்த தேர்தலில், நாம் தமிழருக்கு ஓட்டளித்தேன். அதற்காக இப்போது வருந்துகிறேன். வெறும் பேச்சைத் தவிர அவர்களிடம் எதுவும் இல்லை. புதிதாக அரசியலுக்கு வருவோரை நா.த.க.,வினர் தரம் தாழ்ந்து விமர்சிக்கின்றனர். இவர்களும் ஜெயிக்க மாட்டார்கள்; புதிதாக வரும் த.வெ.க.,வினரையும் ஆதரிக்க மாட்டார்கள். நடிகர் விஜய் தி.மு.க.,வை விமர்சித்தால், நா.த.க.,வினர் கொந்தளிக்கின்றனர். இந்த தேர்தலில் நான் த.வெ.க.,விற்கு ஓட்டளிக்க போகிறேன். என் குடும்பத்தில் உள்ளவர்களை த.வெ.க.,விற்கே ஓட்டளிக்க வேண்டும் என வற்புறுத்த மாட்டேன். என் வயது இளைஞர்களின் ஒரே நம்பிக்கை நட்சத்திரமாக ஒளிர்கிறார் விஜய்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

பாபு, திருநெல்வேலி
ஏப் 06, 2026 23:18

அரசியல்ல இவனுங்களுக்கு எதிராக யார் வந்தாலும் எதாவது குறை சொல்லிட்டே இருப்பானுங்க. இவனுகளும் நல்லது செய்யமாட்டானுக செய்ய வர்றவங்களையும் விடமாட்டார்கள்....


Sarashan
ஏப் 06, 2026 10:56

மதுரை, உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தும், திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் ஏற்றாமைக்கு, தப்பித் தவறி கூட ஒரு வார்த்தையும் பேசாத ஜோசப் விஜய்தான் சமூக நீதி காக்கப் புறப்பட்டவர் எனில் உங்களின் கருத்து வரவேற்கப்படவேண்டிய ஒன்று.


மேலும் இந்தமுறை ஓட்டு யாருக்கு