Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


சாக்கடை அடைப்பை சரிசெய்ய கூட லஞ்சம்!

சாக்கடை அடைப்பை சரிசெய்ய கூட லஞ்சம்!

ஆர்.சரவணக்குமார், 27 சோழவந்தான், மதுரை

க டந்த தேர்தலில் தி.மு.க.,விற்கு ஓட்டளித்தேன். ஆனால், ஏமாற்றமே மிஞ்சியது. என் தொகுதியில் நிறைய கிராமங்களில் இன்னும் அடிப்படை வசதிகள் கூட இல்லை. பொது கழிப்பறை, பூங்கா, நுாலகம் உள்ளிட்டவை பெயரளவில் மட்டுமே உள்ளன. சாக்கடை அடைப்பு சரிசெய்ய கூட லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது.

இலவசங்களை நம்பி தேர்தலில் மக்கள் ஓட்டளிக்க கூடாது. என் ஊரில், டிபன் பாக்ஸ் போன்ற பரிசுப்பொருட்களை தருகின்றனர். தேர்தல் பறக்கும் படையினர் என்ன செய்கின்றனர் என தெரியவில்லை.

இளைஞர்கள் மத்தியில் த.வெ.க.,விற்கு ஆதரவு அலை உள்ளது. ஆனால், அவர்கள் சமூக வலைதளங்களில் மட்டுமே ஆர்வமாக செயல்படுகின்றனர். முதல் தேர்தல் என்பதால், முதல்வராகும் வாய்ப்பு நடிகர் விஜய்க்கு குறைவு.

கிராமங்களுக்கான பஸ்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். தமிழ் வளர்ச்சி துறையில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். தமிழ் படித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை செய்தால், காலமுள்ளவரை என் குடும்பத்தினரின் ஓட்டு தி.மு.க.,விற்கே.

Advertisement