Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


தேர்தலில் ஜாதி பார்ப்பதுதான் சமூகநீதியா?

தேர்தலில் ஜாதி பார்ப்பதுதான் சமூகநீதியா?

டி.மதிவாணன், 27 கம்பம், தேனி

ஊ ழல் அதிகரித்து விட்டது. கிராமப்புறங்களில் போதுமான பஸ் வசதி இல்லாமல், கல்லுாரி செல்வோர், வயதானோர் பாதிக்கப்படுகின்றனர். மக்களை, ஜாதி பார்த்து ஓட்டு போடும் நிலைக்கு தி.மு.க.,வினர் தள்ளி விட்டனர். சமூக நீதி பேசுவோர், ஏன் ஜாதி பார்த்து வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டும். தேர்தல் நேரத்தில் மட்டும் தான் தி.மு.க.,வினர் தீயாய் வேலை செய்கின்றனர். பிற நேரங்களில் யார் கண்ணிலும் படுவதில்லை.

கடந்த தேர்தலில், நாம் தமிழருக்கு ஓட்டளித்தேன். அதற்காக இப்போது வருந்துகிறேன். வெறும் பேச்சைத் தவிர அவர்களிடம் எதுவும் இல்லை.

புதிதாக அரசியலுக்கு வருவோரை நா.த.க.,வினர் தரம் தாழ்ந்து விமர்சிக்கின்றனர். இவர்களும் ஜெயிக்க மாட்டார்கள்; புதிதாக வரும் த.வெ.க.,வினரையும் ஆதரிக்க மாட்டார்கள். நடிகர் விஜய் தி.மு.க.,வை விமர்சித்தால், நா.த.க.,வினர் கொந்தளிக்கின்றனர்.

இந்த தேர்தலில் நான் த.வெ.க.,விற்கு ஓட்டளிக்க போகிறேன். என் குடும்பத்தில் உள்ளவர்களை த.வெ.க.,விற்கே ஓட்டளிக்க வேண்டும் என வற்புறுத்த மாட்டேன். என் வயது இளைஞர்களின் ஒரே நம்பிக்கை நட்சத்திரமாக ஒளிர்கிறார் விஜய்.

Advertisement