Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 பெண்களின் நலத்திட்ட வாக்குறுதிகளை கூறி அ.தி.மு.க., வேட்பாளர் ஓட்டு சேகரிப்பு

 பெண்களின் நலத்திட்ட வாக்குறுதிகளை கூறி அ.தி.மு.க., வேட்பாளர் ஓட்டு சேகரிப்பு

கும்மிடிப்பூண்டி: தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள பெண்கள் நலத்திட்ட வாக்குறுதிகளை எடுத்துக் கூறி, பெண்கள் மத்தியில், கும்மிடிப்பூண்டி அ.தி.மு.க., வேட்பாளர் சுதாகர் ஓட்டு சேகரித்தார்.

கும்மிடிப்பூண்டி அ.தி.மு.க., வேட்பாளர் சுதாகர் நேற்று, பண்பாக்கம், கெட்ணமல்லி, குருவராஜகண்டிகை, சிறுபுழல்பேட்டை, புதுகும்மிடிப்பூண்டி மற்றும் கும்மிடிப்பூண்டி நகரில் பிரசாரம் மேற்கொண்டார்.

கும்மிடிப்பூண்டி அ.தி.மு.க., தெற்கு ஒன்றிய செயலர் மகேந்திரன், கும்மிடிப்பூண்டி நகர செயலர் ரவி ஆகியோர் தலைமையில், கூட்டணி கட்சி பிரமுகர்கள் உடன் சென்றனர். அனைத்து கிராம பகுதிகளிலும், அ.தி.மு.க., வேட்பாளர் சுதாகருக்கு, பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

அப்போது, சுதாகர் பேசியதாவது:

அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன் விலைவாசி ஏற்றத்தை சமாளிக்க, ஒவ்வொரு குடும்பத்திற்கும், 10,000 ரூபாய் சிறப்பு உதவித்தொகை, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், மாதம் 2,000 ரூபாய், அம்மா இல்லம், 100 நாள் வேலை 150 நாட்களாக உயர்த்தப்படும்.

வேலைக்கு செல்லும் பெண்கள், 25,000 ரூபாய் மானியத்துடன் இருசக்கர வாகனம், குடும்ப அட்டைதாரர்களுக்கு வாழ்வாதார உதவியாக ஆண்டுக்கு மூன்று விலையில்லா காஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும். எனவே, பெண்கள் நலத்திட்டங்களை வாக்குறுதிகளாக கொண்டுள்ள அ.தி.மு.க.,வுக்கு, நீங்கள் ஓட்டு போட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement