Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 தி.மு.க., வாக்குறுதிகளுக்கு மத்திய அரசு நிதி தருமா?

 தி.மு.க., வாக்குறுதிகளுக்கு மத்திய அரசு நிதி தருமா?

கடந்த 2021ல் தி.மு.க., கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற, மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர். இவர்கள் வாக்குறுதிக்கு, மத்திய அரசு எப்படி நிதி கொடுக்க முடியும்? பள்ளி கல்வித்துறை அமைச்சர், ஒரு விளையாட்டு பிள்ளை; உதயநிதி ரசிகர் மன்ற தலைவர். மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர், 'தமிழகத்தில் கஞ்சாவே இல்லை' என்றார். மறுநாளே, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கஞ்சா செடி இருப்பதாக ஊடகங்கள் படம் பிடித்து வெளியிட்டன.
மீண்டும் ஆட்சிக்கு வரப்போவதில்லை என்பதால், முடிந்த அளவுக்கு சுருட்டும் நிலைக்கு தி.மு.க.,வினர் வந்து விட்டனர். பா.ஜ., ஆள்வதால் ஹிந்துத்துவ நாடு என்கின்றனர். இந்தியாவில் முஸ்லிம்கள் பாதுகாப்பாக இப்தார் நோன்பு கடைப்பிடித்தனர். பாகிஸ்தானில், பாதுகாப்பு இல்லாமல் வீதிகளில் இப்தார் நோன்பு செய்யும் நிலை இருந்தது.

- தினகரன், பொதுச்செயலர், அ.ம.மு.க.,

Advertisement