Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 அனைவருக்கும் கறிவிருந்து; சுந்தர்.சி உறுதி

 அனைவருக்கும் கறிவிருந்து; சுந்தர்.சி உறுதி

மதுரை மத்திய தொகுதியில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடந்தது. அதில், தே.ஜ., கூட்டணியில் புதிய நீதிக்கட்சி சார்பில் இரட்டை இலை சின்னத்தில் சினிமா இயக்குநர் சுந்தர்.சி போட்டியிடுகிறார்.

அவர் பேசியதாவது:

நான் இந்த தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்ததும், இந்தத் தொகுதியிலா என்று கூறி எதிர்ப்பு கிளம்பியது. 'அவரை' எதிர்த்து போட்டியிட முடியாது என்றனர். அவர் என்ன எம்.ஜி.ஆரா? அவர் பி.டி.ஆர்., தான்.

தி.மு.க.,வினரிடம் பில்டிங் மட்டும்தான் ஸ்ட்ராங். பேஸ்மென்ட் வீக்காகத்தான் இருக்கு. என்னை வெளியூர்காரன் என்கின்றனர். உள்ளூரில் இருந்தவர்கள் என்ன சாதித்தனர். இந்தப் பகுதி மக்கள், தங்கள் எம்.எல்.ஏ.,வாக உள்ள அமைச்சர் தியாகராஜனை பார்த்ததே இல்லை என்கின்றனர்.

நான் வென்றால், மதுரையில் கோவில் அருகே உள்ள கறிக்கடைகளை மூடுவேன் என்று கூறியதாக பொய் பிரசாரம் செய்கின்றனர். நான், வாரத்தில் ஆறு நாள் கறி சோறு சாப்பிடுபவன். நான் வெற்றி பெற்றால் மக்களுக்கு கறி விருந்து அளிப்பேன். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement