Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 நெற்றியில் வைத்த குங்குமத்தை அழித்த துரைமுருகனால் சர்ச்சை

 நெற்றியில் வைத்த குங்குமத்தை அழித்த துரைமுருகனால் சர்ச்சை

காட்பாடி: விநாயகர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த அமைச்சர் துரைமுருகன், தன் நெற்றியில் வைத்த குங்குமத்தை அழித்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வேலுார் மாவட்டம், காட்பாடி தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் துரைமுருகன், தன் மகன் கதிர் ஆனந்துடன் இ ணைந்து பிரச்சாரம் செய்து வருகிறார்.

தொகுதிக்குட்பட்ட, பொன்னை அடுத்த ஒட்டனேரி, விநாயகர் கோவிலில், துரை முருகன், கதிர் ஆனந்த் சுவாமி தரிசனம் செய்தனர். அப்போது, துரைமுருகனுக்கு விபூதி மற்றும் குங்குமத்தை அர்ச்சகர் வைத்து விட்டார்.

முதலில் அதை தடுத்த துரைமுருகன், அடுத்த சில வினாடிகளில், தன் கைக்குட்டையால் குங்குமத்தை அழித்தார். இதுகுறித்த வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி, சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள ஹிந்து அமைப்பினர், 'கோவிலுக்கு செல்லும் அமைச்சர், குங்குமத்தை கண்டால் ஒதுங்குவது ஏன் ? தி.மு.க., கூட்டணி கட்சியினர் ஹிந்து கோவில்கள் மற்றும் ஹிந்து சின்னங்களை, தொடர்ந்து இழிவுபடுத்தி வருகின்றனர்.

'தி.மு.க.,வினர், ஓட்டுக் காக மட்டுமே கோவிலுக்கு சென்று நாடக மாடுகின்றனர்' என்றனர்.

Advertisement