'விஜயகாந்த் போலவே விஜயும் தாக்கத்தை ஏற்படுத்துவார்'
மதுரை: ''தமிழக அரசியலில், விஜய்காந்த் போலவே, விஜய தாக்கத்தை ஏற்படுத்துவார். அது, தி.மு.க.,வுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்'' என அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் கூறினார்.
மதுரையில், அவர் அளித்த பேட்டி:
தே.ஜ., கூட்டணி தலைவர்கள் சிலரை குற்றவாளிகள் என முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். குற்றவாளிக்கும், குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கும் உள்ள அர்த்தம் தெரியாமல் முதல்வர் பேசுகிறார்.
அவர் பயத்தின் உச்சத்தில் உள்ளார். தி.மு.க., அரசை முடிவுக்கு கொண்டு வருவதில், தமிழக மக்கள் உறுதியாக உள்ளனர்.
தி.மு.க.,வின் ஐந்து ஆண்டு ஆட்சியில், அனைத்து துறைகளிலும் ஊழல்; 30 சதவீதம் கமிஷன் பெற்றுக்கொண்டுதான் வேலை நடக்கிறது. திராவிட மாடல் 'சீட்டிங் மாடல்' ஆகி விட்டது.
'தேர்தலில் போட்டியிட போவதில்லை' என தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை முன்பே என்னிடம் தெரிவித்தார்.
தமிழகம் முழுதும் அவர் பிரச்சாரம் செய்வார்.
கூட்டணியில், கட்சிகளுக்குள் அதிருப்தி இருப்பது காலம் காலமாக உள்ளது தான். தமிழகத்தில், அ.தி.மு.க., ஆட்சி அமையும்; தொங்கு சட்டசபை அமையாது.
தமிழக அரசியலில் விஜயகாந்த் போல், விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார். அது, தி.மு.க.,வுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
பலமான கூட்டணியை, த.வெ.க., அமைத்திருந்தால், தி.மு.க.,வுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும். அதனால் தான் தி.மு.க., அதிக இடங்களில் போட்டியிடுவதோடு, 26 கட்சிகளுடன் கூட்டணி வைத்திருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்