Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


துணை முதல்வர் பதவி: விஜயிடம் பா.ம.க., பேரம்

துணை முதல்வர் பதவி: விஜயிடம் பா.ம.க., பேரம்
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை: த.வெ.க.,வுக்கு தனி பெரும்பான்மை கிடைக்காததால், பா.ம.க.,வுடன் நடந்த பேச்சில், துணை முதல்வர் பதவி கேட்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலில், 106 தொகுதிகளில் த.வெ.க., வெற்றி பெற்றுள்ளது. இது, தனித்து ஆட்சி அமைக்க போதுமானது இல்லை. எனவே, கூட்டணி ஆட்சி அமைக்க, பா.ம.க., தலைவர் அன்புமணியுடன் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து, த.வெ.க., வட்டாரங்கள் கூறியதாவது: பெரும்பான்மையை நிரூபிக்க த.வெ.க.,வுக்கு இன்னும் 12 இடங்கள் தேவை. இதில், காங்கிரஸ் கூட்டணிக்கு வர சம்மதித்து விட்டது; அது மட்டும் போதாது. எனவே, அ.தி.மு.க., கூட்டணியில் அங்கம் வகித்து, ஐந்து தொகுதிகளில் வெற்றி பெற்ற, பா.ம.க.,வுடன் பேச்சு நடத்தப்பட்டது.

ஆனால், துணை முதல்வர் பதவியை, தனது மனைவி சவுமியாவுக்காக, அக்கட்சியின் தலைவர் அன்பு மணி கேட்கிறார். அதேபோல், விஜய் ராஜினாமா செய்ய உள்ள, ஒரு தொகுதியையும் கேட்கிறார்.

வெறும் ஐந்து தொகுதிகளில் வெற்றி பெற்று, இவ்வளவு பெரிய 'டிமாண்ட்'ஐ பா.ம.க., முன்வைப்பது, விஜய்க்கு பிடிக்கவில்லை. எனவே, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் வி.சி.க.,வுடன் தீவிர பேச்சு நடந்து வருகிறது.

சென்னையில் நாளை எம்.எல்.ஏ.,க்களை சந்தித்து விட்டு, ஆட்சி அமைக்க கவர்னரிடம் விஜய் உரிமை கோர உள்ளார். பெரும்பான்மையை நிரூபிக்க, கவர்னர் எவ்வளவு நேரம் கொடுப்பார் என, தெரியவில்லை. அவர் கொடுக்கும் கால அவகாசத்துக்குள், ஆட்சிக்கு தேவையான ஆதரவை திரட்டி, பெரும்பான்மையை நிரூபிக்க விஜய் திட்டமிட்டுள்ளார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.

Advertisement