Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


தி.மு.க., கூட்டணி வெற்றிக்கு கைகொடுக்காத தே.மு.தி.க.,

தி.மு.க., கூட்டணி வெற்றிக்கு கைகொடுக்காத தே.மு.தி.க.,
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை: தி.மு.க., 22 கட்சிகளுடன் இணைந்து, பிரமாண்ட கூட்டணியை உருவாக்கி, தேர்தலை சந்தித்தது. ஒவ்வொரு கட்சிக்கும் உள்ள, தனிப்பட்ட ஓட்டு சதவீதம் காரணமாக, வெற்றியை எளிதாக பெற்றுவிடலாம் என, தி.மு.க., தலைமை கணக்கு போட்டது. இந்த கூட்டணியில், தே.மு.தி.க., கடைசியாக வந்து சேர்ந்தது. அக்கட்சிக்கு ஒரு ராஜ்யசபா எம்.பி., பதவியும், 10 சட்டசபை தொகுதிகளும் வழங்கப்பட்டன.

ராஜ்யசபா எம்.பி.,யாக, விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ் தேர்வு செய்யப்பட்டார். தி.மு.க., கூட்டணி வெற்றிக்கு, தே.மு.தி.க., ஓட்டுகள் கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பிரசாரத்தின்போது, தமிழகத்தில் நிலவும் சட்டம் - ஓழுங்கு பிரச்னை, பாலியல் பிரச்னைகள் குறித்து, தே.மு.தி.க., பொதுச் செயலர் பிரேமலதா வெளிப்படையாகப் பேசினார். முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், அவர் பேசியதை, அ.தி.மு.க.,வினர் கையில் எடுத்து பிரசாரம் செய்தனர்.

தேர்தல் முடிவில், தே.மு.தி.க., மட்டுமின்றி தி.மு.க., கூட்டணியே, படுதோல்வியை சந்தித்துள்ளது. தே.மு.தி.க.,வால் தி.மு.க.,வுக்கு எந்த பயனும் ஏற்படவில்லை.

Advertisement