தாக்கத்தை ஏற்படுத்தாத ராமதாஸ்; செல்வாக்கை நிரூபித்த அன்புமணி
சென்னை: நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தாக்கத்தை ஏற்படுத்தாத நிலையில், அக்கட்சியின் தலைவர் அன்புமணி, கட்சியில் தன் செல்வாக்கை நிரூபித்துள்ளார்.
பா.ம.க.,வில் அப்பா -- மகனுக்கு இடையே ஏற்பட்ட மோதலால், இருவரும் தனித்தனியாக செயல்பட்டனர். அ.தி.மு.க., கூட்டணியில், 18 தொகுதிகளில் போட்டியிட்ட அன்புமணி பா.ம.க., நான்கு தொகுதிகளில் வென்றுள்ளது.
சசிகலாவின் அகில இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியுடன் கூட்டணி அமைத்த ராமதாஸ், அனைத்திந்திய ஜனநாயக பாதுகாப்பு கழகம் என்ற பெயரில், 35 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தார். தங்கள் வேட்பாளர்கள் அன்புமணி பா.ம.க.,வின் வெற்றியை தடுப்பர் என, ராமதாஸ் கூறி வந்தார்.
சேலம் மேற்கு தொகுதியில், ராமதாஸ் தரப்பில் போட்டியிட்ட அருள், 10,000 ஓட்டுகள் பெற்றார். அன்புமணியின் மனைவி சவுமியா வென்ற தர்மபுரியில், ராமதாஸ் தரப்பு வேட்பாளர் சரவணன், 1,031 ஓட்டுகள் மட்டுமே பெற்றார். மற்ற தொகுதிகளில், 2,000க்கும் குறைவாகவே ராமதாஸ் தரப்பு வேட்பாளர்கள் பெற்றுள்ளனர்.
ராமதாசை எதிர்த்து தேர்தல் களம் கண்ட அவரது மகன் அன்புமணி, பா.ம.க.,வில் தனது செல்வாக்கை உறுதிப்படுத்தி உள்ளார். இதனால், பா.ம.க., அன்புமணி வசமாகியுள்ளது.
Advertisement
ஜாதியையும் ஓட்டுகளையும் சரி சமமாக பிரித்து ஆடி, யாருக்கும் பயன்படாத வகையில் சாதனை படைத்த கோமகன்கள்... கோமாளிகள் என்று சொன்னால் கூட தப்பில்லை. நான் கூட முதலில் நடிப்பு என்று நினைத்தேன்...

சின்னம்மா தாத்தா அப்பா எல்லோரையும் ஒரம்கட்டிட்டாரு விஜய்