தமிழக வாக்காளர்களுக்கு தேர்தல் கமிஷன் 'சல்யூட்'
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: இதுவரை இல்லாத அளவுக்கு அதிக ஓட்டுகள் பதிவாகியுள்ளதால், தமிழகம், மேற்கு வங்க வாக்காளர்களுக்கு தலைவணங்குவதாக, தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று அவர் அளித்த பேட்டியில், ''தமிழகம், மேற்கு வங்கத்தில் நடந்த ஜனநாயக திருவிழாவில் பங்கேற்ற ஒவ்வொரு வாக்காளருக்கும், இந்திய தேர்தல் கமிஷன் தலை வணங்குகிறது.
நாடு சுதந்திரம் பெற்ற பின் தமிழகம், மேற்கு வங்கத்தில் இதுவரை இல்லாத அதிகபட்ச ஓட்டுகள் பதிவாகியுள்ளன,'' என, கூறியுள்ளார்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்