Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


அ.தி.மு.க.,வை இபிஎஸ் விற்று விட்டார்; உதயநிதிக்கு கவலை

அ.தி.மு.க.,வை இபிஎஸ் விற்று விட்டார்; உதயநிதிக்கு கவலை

துாத்துக்குடி: “பதவிக்காக யார் காலிலும் விழுந்த அனுபவம் எனக்கு கிடையாது,” என துணை முதல்வர் உதயநிதி தெரிவித்தார்.

துாத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் மற்றும் கோவில்பட்டி தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து, பிரசாரம் செய்த உதயநிதி பேசியதாவது:
ஸ்டெர்லைட் படுகொலை, சாத்தான்குளம் தந்தை, மகன் படுகொலை என துாத்துக்குடி மாவட்டத்திற்கு துரோகம் செய்த, அ.தி.மு.க., பொதுச்செயலர் இபிஎஸ்யை இந்த முறையும் தண்டிக்க வேண்டும். மத்திய பா.ஜ., அரசு, தமிழகத்திற்கு நிதியையும், திட்டங்களையும் கொடுக்கவில்லை. தமிழகத்தின் ஒவ்வொரு உரிமைகளையும் இபிஎஸ் விற்று விட்டார்.
கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., கட்சியை பா.ஜ.,விற்கு வாடகைக்கு விட்டிருந்த இபிஎஸ். இந்த தேர்தலில் பிரதமர் மோடியிடம் மொத்தமாக விற்று விட்டார். மோடியின் முரட்டு அடிமையாக இபிஎஸ் இருப்பதை, நான் சொன்னால், அவர் கோபித்துக் கொண்டு எனக்கு என்ன அனுபவம் இருக்கிறது என கேட்கிறார்.
பதவிக்காக யாருடைய காலிலும் விழுந்த அனுபவம் எனக்கு கிடையாது. சங்கி கூட்டத்திடம் அடிமையாக இருக்கும் அனுபவமும் எனக்கு கிடையாது. அவர், என்னை திட்டுகிறார். என்னை பார்த்து செத்துப் போயிருங்கள் என சொல்கிறார். உயிரோடு இருந்து தொல்லை கொடுப்பதாக கூறுகிறார்.
காலில் விழுவது தவறில்லை, காலில் விழுந்து முதல்வராகி சசிகலா காலை வாரி விட்டார். இப்போது, மோடி கால்களை பிடித்து தொங்கிக் கொண்டு கொண்டிருக்கிறார். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement