Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 பழனிசாமி தலைமையில் ஆட்சி உறுதி

 பழனிசாமி தலைமையில் ஆட்சி உறுதி

அவிநாசி: அவிநாசி தொகுதி தே.ஜ. கூட்டணி தேர்தல் காரியாலயத்தில், உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து நேற்று அளித்த பேட்டி:

சட்டசபை தேர்தலில் தே.ஜ. கூட்டணி தலைமையிலான பழனிசாமி ஆட்சி தமிழகத்தில் வருவது உறுதி. 5 ஆண்டு காலமாக எந்த தரப்பு மக்களுக்கும் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் தி.மு.க.வினர் பொய் சொல்லியே காலம் கடத்தி விட்டனர்.

அந்தக் கோபத்தின் விளைவாக இன்று மக்களும் தெளிவாக புரிந்து கொண்டனர். மீண்டும் பழனிசாமி முதல்வராக வந்தால் தான் விவசாயிகளுக்கு விடிவு காலம் பிறக்கும்.

அவருடைய ஆட்சியில் தான், 50 ஆண்டு கோரிக்கையான அத்திக்கடவு - அவிநாசி திட்டம் நிறைவேற்றப்பட்டது. பாலைவனமாக இருந்த பூமி எல்லாம் இன்று பொன் விளையும் பூமியாக மாறி உள்ளது.

ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்துக்காக போராடிக் கொண்டிருக்கிறோம். இதற்காக, ஐந்து முறை கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியவர் பழனிசாமி. ஆனால், ஸ்டாலின் ஐந்து ஆண்டு காலம் கேரள முதல்வர் என் நண்பர் எனக் கூறி, ஒரு முறை கூட இந்த திட்டம் குறித்து பேசவில்லை.

இவ்வாறு, விவசாயிகளுக்கு விரோதியான ஆட்சியில், பொதுமக்களுக்கு, பெண்களுக்கு, பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை.

எங்கு பார்த்தாலும் கஞ்சா தாராளமாக விற்கப்படுகிறது. இளைஞர்கள் 24 மணி நேரமும் போதையில் மிதக்கிறார்கள். இந்த கொடுங்கோல் ஆட்சிக்கு முடிவு கட்டவே தேர்தல் வந்துள்ளது.

அவிநாசி தொகுதி பா.ஜ. வேட்பாளர் முருகன் வெற்றி பெற்றால், இந்த தொகுதி மட்டுமல்ல. கொங்கு மண்டலமே அத்தனை திட்டங்களும் பெறுவதற்கு ஒரு முன்னோடி வாய்ப்பாக அமையும்.

மத்தியிலும், மாநிலத்தில் உள்ள ஆட்சியும் ஒன்றிணைந்து ஒருமனதாக பாடுபட்டு தமிழக மக்கள் அத்தனை பேருக்கும் அளவற்ற திட்டங்கள் கொண்டு வந்து சேர்ப்பார்கள்.

Advertisement