அமைச்சர்கள் தோல்வி; தி.மு.க.,வில் சீரமைப்பு
- நமது நிருபர் -
த.வெ.க., அலையில், தி.மு.க.,வில் அமைச்சர்களும் சிக்கி காணாமல் போயுள்ளனர்.
இதுதொடர்பாக, தி.மு.க., நிர்வாகி ஒருவர் கூறியதாவது: சட்டசபை தேர்தலில் விஜய் அலை சுனாமி போல் வீசி விட்டது.
முதல்வர் ஸ்டாலினையும், அது விட்டு வைக்கவில்லை. சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் துரைமுருகன், முத்துசாமி, சாமிநாதன், காந்தி, தா.மோ.அன்பரசன், மூர்த்தி, மதிவேந்தன், தியாகராஜன், மகேஷ், நாசர், மா.சுப்பிரணியன், கீதா ஜீவன், டி.ஆர்.பி.ராஜா, ராஜேந்திரன் உள்ளிட்டோரையும் வீழ்த்தி விட்டது.
மூத்த அமைச்சர்களை தொகுதி மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. தொகுதிக்கு புதுமுகம் தேவை என்ற அடிப்படையில், த.வெ.க., வேட்பாளர்களை வெற்றி பெற வைத்துள்ளனர்.
பல ஆண்டுகளாக மாவட்ட செயலர் பதவி வகித்து, கட்சியில் கோலோச்சி அமைச்சர்களாக இருந்த சிலரும் படுதோல்வி அடைந்துள்ளனர்.
ஆடிக்காற்றில் அம்மிக்கல்லே பறக்கும்போது, அதாவது எங்கள் முதல்வரே தோற்கும்போது, இவர்கள் எம்மாத்திரம்? அதனால், அதை நாங்கள் பொருட்படுத்தவில்லை.
இனி கட்சியில் சீரமைப்பு நடவடிக்கைகள் துவக்கும்போது, கட்சியில் கோலோச்சிய இவர்களின் ஆதிக்கம் தடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement
மாற்று கட்சியிலிருந்து வந்தவர்களை நம்பி உடன் பிறப்புக்களுக்கு அல்வா கொடுத்ததால் வந்த வினை
Dmk will never come to power again as it will lose its base in the coming years.
திட்டம் என்று கூறி அப்பன் பேரையும் உங்கள் பெயரையும் சூட்டியதை தவிர வேறு ஒன்றும் மக்களுக்காக செய்யவில்லை
பழைய ஆட்களை நீக்கி இளம் படையை உருவாக்கி ரவுடிசியம் தவிர்த்தால் கட்சி வளரும்.
முதலில் சீரமைக்க வேண்டியது இந்த குருவிக்கூட்டு தலையைத்தான் ஸாரி இரும்புக்கை கோப்பால் சாரைத்தான்.

அடுத்து என்ன, அகில உலக துணை நடிகர் சூப்பர் ஸ்டார் உதைணாவை தலைவராக போடுவார்கள். அவர் அவரது நண்பர்களை தேர்ந்தெடுப்பார். பிறகு கழுதை தேய்ந்து கட்டெறும்பாக மாறும்.