பெண்களுக்கு எதிரான கட்சி: தி.மு.க., மீது பா.ஜ., புகார்
சென்னை: ''தி.மு.க., பிரிவினைவாதத்தை முன்னெடுக்கும் கட்சி என்பதில் யாருக்கும் மாற்று கருத்து கிடையாது. பெண்களுக்கு எதிரான கட்சி என்பதையும் தெளிவுபடுத்தி இருக்கிறது,'' என, தமிழக பா.ஜ., தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்தார்.
அவரது பேட்டி: காங்கிரசை பொறுத்தவரை எப்போதும் பெண்களுக்கு எதிரான ஒரு கட்சி என்பதில், யாருக்கும் மாற்று கருத்து இல்லை. பெண்கள் முன்னேற்றம் அடையக் கூடாது என்பதில், தி.மு.க.,வும் தெளிவாக உள்ளது.
தி.மு.க., குடும்ப கட்சியாக இருந்தாலும் கூட, குடும்பத்தில் உள்ள பெண்களை முன்னேற விடாமல், தன் வாரிசை தான் முன்னிலைப்படுத்துகிறது.
ஸ்டாலின் தன் நிலையை தெளிவுபடுத்த வேண்டும். 'பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது' என்று, தைரியமாக சொல்ல வேண்டும். மக்கள் அவர்களை பார்த்து கொள்வர்.
மாநில உரிமைகளை பறிப்பதாக கதை கட்டி, தேர்தலுக்கு ஆதாயமாக்க நினைத்து கொண்டிருந்தவர்கள், அமித் ஷாவின் பேச்சால் தடம் புரண்டு போயுள்ளனர்.
தி.மு.க., பிரிவினைவாதத்தை முன்னெடுக்கும் கட்சி என்பதில், யாருக்கும் மாற்று கருத்து கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்