Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


தமிழகத்தில் இன்று பிரதமர் மோடி, ராகுல் பிரசாரம்

தமிழகத்தில் இன்று பிரதமர் மோடி, ராகுல் பிரசாரம்
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

நமது நிருபர்


தேர்தல் களம் அனல் பறந்து கொண்டிருக்கும் சூழலில், தமிழகத்தில் இன்று (ஏப்ரல் 18) பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்பியும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் பிரசாரம் மேற்கொள்ள இருக்கின்றனர்.


தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, பிரதமர் மோடி, கோவையில் இன்று(ஏப்.,18) பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரம் வரும், 21ம் தேதியுடன் நிறைவடைகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து, பிரதமர் மோடி, கடந்த 15ம் தேதி நாகர்கோவிலில், 'ரோடு ஷோ' வாயிலாக பிரசாரம் செய்தார். இதில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பங்கேற்றார்.

இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், கோவையில் இன்று மாலை பிரசார பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில், பிரதமர் மோடி பங்கேற்று, கோவை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்ட தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க., - பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து, பிரசாரம் செய்ய உள்ளார். இந்த கூட்டத்தில், பழனிசாமி உட்பட தே.ஜ., கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

இதுபோல, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதி பா.ஜ., வேட்பாளர் கிர்த்திகாவை ஆதரித்து, நாளை பிரசாரம் செய்கிறார். நாளை மாலை, சென்னை மயிலாப்பூரில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர் தமிழிசையை ஆதரித்து, 'ரோடு ஷோ' வாயிலாக பிரசாரம் செய்கிறார்.

ராகுல் பிரசாரம்

தமிழகத்தில் இன்று ராகுல் தேர்தல் பிரசாரம் செய்கிறார். அதன் விபரம் பின்வருமாறு:

பொன்னேரி- முற்பகல் 11.30 மணி

சோளிங்கர்- மதியம் 1 மணி

துறையூர்- மாலை 3.30 மணி

Advertisement