Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 காங்கிரஸ் வேட்பாளர் வீட்டில் ரூ.99.99 லட்சம் பறிமுதல்

 காங்கிரஸ் வேட்பாளர் வீட்டில் ரூ.99.99 லட்சம் பறிமுதல்

துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்., வேட்பாளர் அமிர்தராஜுக்கு சொந்தமான, துாத்துக்குடி, கணேஷ் நகர் வீட்டில் தங்கியிருந்து பிரசாரம் செய்து வந்தார். அவரது வீட்டில் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது.

பறக்கும் படை குழுவினர், நேற்று முன்தினம் அங்கு சோதனை நடத்தி, கணக்கில் வராத, 62 லட்சத்து 49,000 ரூபாயை பறிமுதல் செய்தனர். வீட்டில் இருந்த சுரேஷ் என்பவரிடம் விசாரிக்கப்பட்டது. தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதற்கிடையே, அமிர்தராஜ் வீட்டில் உள்ள மற்றொரு அறையில் வருமான வரித்துறை அதிகாரிகள் நள்ளிரவு முதல் விடியவிடிய சோதனை நடத்தினர். அந்த அறையில் எந்தவித ஆவணங்களும் இன்றி பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 37 லட்சத்து 50,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

அமிர்தராஜை தொடர்பு கொள்ள முடியாத நிலையில், இதுதொடர்பாக, உரிய விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப இருப்பதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

பறக்கும் படையினர் மற்றும் வருமான வரித்துறையினர் தனித்தனியே நடத்திய சோதனையில், அமிர்தராஜ் வீட்டில் மட்டும், 99 லட்சத்து 99,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Advertisement