வேட்பாளர் மாற்றம் சசிகலா திடீர் அறிவிப்பு
சென்னை: அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலர் சசிகலா நேற்று வெளியிட்ட அறிக்கையில், 'செங்கல்பட்டு தொகுதியில், வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சுபாஷ் ஆனந்த் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக, மாற்று வேட்பாளரான ராமகிருஷ்ணன் போட்டியிடுவார்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சசிகலா கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர், சுபாஷ் ஆனந்தின் வேட்பு மனு, பரிசீலனையின் போது நிராகரிக்கப்பட்டது. எனவே, அத்தொகுதியில் சுயேச்சையாக மனு தாக்கல் செய்த ராமகிருஷ்ணனை, வேட்பாளராக சசிகலா அறிவித்துள்ளார்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்