Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 பா.ஜ., ராஜா முதல்வராவார் திருமா கணிப்பு

 பா.ஜ., ராஜா முதல்வராவார் திருமா கணிப்பு

- நமது நிருபர் - விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து வி.சி.க., தலைவர் திருமாவளவன் நேற்று பிரசாரம் செய்து பேசுகையில், ''தமிழகத்தில் பா.ஜ.,வை தோளில் சுமந்து வரும் பழனிசாமியை நம்பி அ.தி.மு.க., தொண்டர்கள் ஏமாந்து விடாதீர்கள்.

''பா.ஜ.,வுடன் எக்காரணம் கொண்டும் அ.தி.மு.க., கூட்டணி அமைக்காது என மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூறியதற்கு எதிராக பழனிசாமி செயல்படுகிறார்; தமிழகத்தில் பா.ஜ., வேரூன்ற பழனிசாமி உதவுகிறார்.

தப்பி தவறிக்கூட, அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், பழனிசாமி முதல்வராக நீடிக்க முடியாது. அவருக்கு பதிலாக, பா.ஜ.,வைச் சேர்ந்த எச்.ராஜா தான் முதல்வராவார்,'' என்றார்.

Advertisement