Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


த.வெ.க., - எம்.எல்.ஏ.,க்களுக்கு மூத்த நிர்வாகிகள் நம்பிக்கை

த.வெ.க., - எம்.எல்.ஏ.,க்களுக்கு மூத்த நிர்வாகிகள் நம்பிக்கை
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை : 'உறுதியாக நாம் ஆட்சி அமைப்போம். தைரியமாக இருங்கள்' என, தமிழக வெற்றி கழக எம்.எல்.ஏ.,க்களுக்கு மூத்த நிர்வாகிகள் நம்பிக்கை அளித்துள்ளனர்.

சென்னை பனையூர் கட்சி அலுவலகத்துக்கு நேற்று, அக்கட்சியின் அனைத்து எம்.எல்.ஏ.,க்களும் வரவழைக்கப்பட்டனர்.

அப்போது மூத்த நிர்வாகிகளான ஆனந்த், செங்கோட்டையன் உள்ளிட்ட சிலர் பேசியதாவது: இந்திய தேர்தல் வரலாற்றில், தனிக்கட்சியாக த.வெ.க., பெற்ற வெற்றியை எந்த கட்சியும் பெறவில்லை. ஆனாலும், நம்மை ஆட்சி அமைக்கவிடாமல், சிலர் சூழ்ச்சி செய்கின்றனர். ஆனால், யாரும் பயப்பட தேவையில்லை.

நம் தலைவர் விஜய், கூட்டணி ஆட்சி அமைக்க, சில கட்சிகளுடன் பேசி வருகிறார். விஜயால் தான் நமக்கு இந்த அளவுக்கு வெற்றி கிடைத்தது என்பதை மறந்து விடாதீர்கள். அவர் தான் நம் அடையாளம்.

நிச்சயம் நாம் தான் ஆட்சி அமைப்போம்; தைரியமாக இருங்கள். பதவியேற்பு முடியும் வரை யாரும் சென்னையை விட்டு போக வேண்டாம். இவ்வாறு அவர்கள் பேசினர்.

Advertisement

மே 08, 2026 11:16 am

விஜயை வைத்து அவங்க கட்சி காரனுங்களே விளையாடிட்டு இருக்கானுங்க போல... ஒரு தெளிவான வழியை காட்டாமல் குழப்பி கொண்டிருக்கிறார்கள்

Reply Rate this
மே 08, 2026 05:03 am

கச்சதீவு கட்சியோட கூட்டணி வைத்து தமிழக மக்களுக்கு தனது முதல் துரோகத்தை வெளிப்படுத்தியுள்ளது தவெக

Reply Rate this