Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


கலவரத்தை துாண்ட ஸ்டாலின் திட்டம்: ஹிந்து முன்னணி கடும் குற்றச்சாட்டு

கலவரத்தை துாண்ட ஸ்டாலின் திட்டம்: ஹிந்து முன்னணி கடும் குற்றச்சாட்டு
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

திருப்பூர் : தமிழகத்தில் அசாதாரண சூழலை உருவாக்கி, தேர்தலை தள்ளி வைக்க சதி நடக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது என்று ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் குற்றம்சாட்டி உள்ளார்

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:லோக்சபா தொகுதி மறுவரையறை மசோதாவை பார்லி.,யில் மத்திய அரசு தாக்கல் செய்வதில் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், தி.மு.க., தலைமை, வன்முறையை துாண்டும் வகையில் மிரட்டல் விடுக்கிறது; இது ஜனநாயக விரோதம்.தி.மு.க.,விற்கு, 39 எம்.பி.க்கள் உள்ளனர். சட்ட மசோதாவில் பிரச்னை இருந்தால் சபையில் பேசலாம். சட்ட நகலை எரிப்பதெல்லாம், ஒரு மாநில முதல்வருக்கு அழகில்லை; இது சட்டவிரோதம். இதுபோன்ற பேச்சையும் செயல்களையும் தேர்தல் கமிஷன் கண்டிக்க வேண்டும்.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், இந்த போராட்டம் நடத்த எப்படி அனுமதி பெற்றனர். தமிழக அரசு அதிகாரிகளும், போலீசாரும் இன்னும் தி.மு.க.,வை ஆளுங்கட்சியாக கருதுகிறார்களா?

தமிழகத்தில் அசாதாரண சூழலை உருவாக்கி, தேர்தலை தள்ளி வைக்க சதி நடக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது. மேலும், மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தையும் தி.மு.க., எதிர்க்கிறது. இந்த சட்ட மசோதா தாக்கல் செய்யும் முன்பே, தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் இங்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கு தேர்தல் தோல்வி பயம் தான் காரணம். மக்கள் தி.மு.க.,வின் பொய் பிரசாரத்தை நம்ப வேண்டாம்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Advertisement