மொழி திணிப்பை தமிழகம் ஏற்காது முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்
சென்னை:'எந்த சூழ்நிலையிலும், மொழி திணிப்பை தமிழகம் ஏற்காது' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
'நாடு முழுதும், நடப்பு கல்வியாண்டு முதல், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படும்' என, மத்திய இடைநிலை கல்வி வாரியம் எனப்படும் சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.
இதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், 'இந்திய மொழிகளை ஊக்குவிக்கிறோம் என்ற போர்வையில், ஹிந்திக்கு முன்னுரிமை அளித்து மையப்படுத்தும் செயலை, அரசியல் நோக்கத்துடன் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தீவிரமாக முன்னெடுத்து வருகிறது' என தெரிவித்திருந்தார்.
அவர் கருத்துக்கு, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கண்டனம் தெரிவித்திருந்தார்.
அதற்கு பதில் அளித்துள்ள முதல்வர் ஸ்டாலின், 'மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் கருத்துகள் மிகவும் பொறுப்பற்றவை. எந்த சூழ்நிலை யிலும், மொழி திணிப்பை தமிழகம் ஏற் காது' என கூறியுள்ளார்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்