'என் பெயரை தமிழக பா.ஜ., பரிந்துரைக்கவே இல்லை': அண்ணாமலை
சென்னை: ''இந்த சட்டசபை தேர்தலில், ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று பிரச்சாரம் செய்வதே என் இலக்கு,'' என, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
சென்னையில் நேற்று அவர் அளித்த பேட்டி:
'இந்த தேர்தலில் நான் போட்டியிட விரும்பவில்லை' என, கட்சித் தலைமைக்கு ஏற்கனவே எழுத்துப்பூர்வமாக கடிதம் கொடுத்து விட்டேன். அதோடு, கட்சியின் முக்கிய உயர் மட்ட தலைவர்கள் அனைவரிடமும், 'நான் போட்டியிடவில்லை' என்பதை கூறி விட்டேன்.
கட்சித் தலைமை என்னை பிரச்சாரத்துக்கு பயன்படுத்திக் கொள்வது மகிழ்ச்சி. தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரி, கேரளம் என மற்ற மாநிலங்களிலும், தே.ஜ., கூட்டணி வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்வேன்.
தி.மு.க.,வின் தவறுகளை எடுத்துச்சொல்ல வேண்டும். அதற்கு வலிமையாக நான் பேச வேண்டும். அதை என் பொறுப்பாகவே பார்க்கிறேன்.
எல்லா நேரத்திலும் எல்லா சண்டைகளையும் இழுத்துப் போட்டு கொண்டிருக்க முடியாது. ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒவ்வொரு சண்டை தான் போட முடியும். இந்த தேர்தலில், ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று பிரச்சாரம் செய்வதே என் இலக்கு.
இன்னும் காலம் இருக்கிறது. காட்சிகள் மாறத்தான் போகின்றன. நிறைய தேர்தல்கள் வரத்தான் போகின்றன. அன்றைக்கு போட்டியிடலாம். என்னிடம் அன்பாக இருக்கும் மக்கள், எப்போதும் அன்பாகத்தான் இருப்பர்.
தேர்தலில் நான் போட்டியிடாமல் இருப்பதற்கு, ஏதேதோ காரணங்களை சொல்கின்றனர். ஆனால், என் பெயர், தமிழக பா.ஜ., தேர்வு குழுவில் இருந்தே, மேல்மட்டத்துக்கு போகாத நிலையில், பா.ஜ., தலைமையால் எனக்கு எப்படி 'சீட்' வழங்க முடியும்?
அதேபோல், நான் போட்டியிட விரும்பவில்லை என்பதால், கட்சித் தலைமை, என்னை பிரச்சாரம் செய்ய சொல்லியுள்ளது. அப்படியிருக்க, கட்சி தலைமையை நான் எவ்வாறு குறை கூற முடியும்?
இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement
அதிமுக தலைவர்களை வரம்பு மீறி விர்சித்ததே முதல் காரணம். அதிமுக தலைமை அண்ணாமலயை அப்போதிலிருந்தே விரும்ப வில்லை. இப்போ பேசி என்ன பயன்?
தேர்தலில் போட்டியிட விரும்பாதவர்க்கு கட்சி லிஸ்டில் பெயர் இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன?
உத்தேச வேட்பாளர் பட்டியலில் உங்க பெயரும் உள்ளது என நயினார் பேட்டியில் கூறியவுடனேயே நீங்கள் மறுத்திருக்கலாம். அப்படிச் செய்திருந்தால் இத்தனை வாதபிரதிவாதங்களுக்கு இடமிருந்திருக்காதே. அப்படியே வென்றிருந்தாலும் முதல்வராக முடியாது. எதிர்கட்சித் தலைவராகக் கூட 24 இடங்களில் வெற்றிபெற வேண்டும். இரண்டுக்குமே வாய்ப்பில்லாத நிலையில் பிரச்சாரத்தில் மட்டுமே ஈடுபடுவது கவுரவமானது. மாநிலத்தின் எதிர்காலம் உங்கள் கையில்தான். வாழ்த்துகள்.
என் பெயரை தமிழக பாஜக பரிந்துரைக்கவே இல்லை என்று அண்ணாமலை சொல்லுகிறார் அண்ணாமலை அவர்கள் ஒரு சாதாரண மனிதர் அல்ல அரசு பணியை துறந்து அரசியலுக்கு வந்தவர் இவரை போல் ஒரு சிலரே உண்டு உண்டு என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை..
பீ ஜெயா பீ அனுதாபிகள் நிச்சயம் திரும்பி வெத்து வேட்டு அட்டை கத்தி வீரன் விஜய்க்கு ஒட்டு போடுவார்கள்.
அண்ணாமலை சார் இன்னுமா பாஜகாவில் இருக்கிறர் என்று தொண்டர்கள் மத்தியில் பேசிக்கொள்கிறார்கள்.
நயினாரும், வானதியும் வாய்கிழிய பொய் பேசுகிறார்கள். அண்ணாமலை வெற்றிபெறுவார், மற்றவை மண்ணை கவ்வும் என்ற பயம். சூதும், வாதும் அவர்களை கொள்ளும். ஆனால் பிஜேபி அறிய வாய்ப்பை , இந்த தரைதலைகளை நம்பி இலக்கபோவது உறுதி.
நன்கு படித்த மனிதர். கை சுத்தம். எதிர்கால தமிழகத்திற்கு உள்ள ஒரே நம்பிக்கை நட்சத்திரம். பிஜேபி இவரை பார்லிமென்ட் உறுப்பினர் ஆக்கி, தமிழக திராவிட அரசியலை மாற்ற எடுக்கும் முயற்சி புத்திசாலிதனம். பிஜேபி தலைமை இவரை எதிர்க்கும் சதி கூட்டங்களை அடக்காவிட்டால் அந்த கட்சி இன்னொரு திராவிட ஊழல் கட்சியாக மாறும்.
அப்படி செய்யாவிட்டால் தமிழகத்தில் பிஜேபி வளர வாய்ப்பு இல்லை.
சார் நீங்கள் மௌனம் காப்பது நல்லது. இல்லையென்றால் வேறு பல்லவி பாடி விடுவார்கள்.

சென்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கோவை பாராளுமன்றத் தேர்தலில் தான் போட்டியிட்டதால் O. பன்னீர் செல்வத்திற்கு ராமநாதபுரத்தில் பிரச்சாரம் செய்ய இயலாமல் போய் விட்டது என இன்று வருத்தப்பட்டு பேட்டி அளிக்கிறார் அண்ணாமலை. இப்போது ஓ.பி.எஸ்ஐ பற்றி வருத்தப் பட்டு இவர் பேச வேண்டிய அவசியம் என்ன? இப்படி இவர் பேசினால் பா.ஜ.க, அ.தி.மு.க கூட்டணி களத்தில் எப்படி முழுமையாக இணையும்?