Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 தேர்தலில் விஜய் மீதான ஈர்ப்பு உண்மைதான்

 தேர்தலில் விஜய் மீதான ஈர்ப்பு உண்மைதான்

அம்பேத்கர் வகுத்த கூட்டாட்சி தத்துவத்தை, மதச்சார்பற்ற உன்னதமான குறிக்கோளை, மத்திய பா.ஜ., அரசு வீணாக்கி வருகிறது. இட ஒதுக்கீட்டை படிப்படியாக குறைத்து, இல்லை என்ற நிலையை உருவாக்குகிறது. உயர்கல்வி முழுதையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் வகையில், மும்மொழி கொள்கையை திணிக்கிறது.
இதை எதிர்த்தும், நாட்டின் பன்முகத்தன்மையை காப்பாற்றவும், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அமைத்துள்ளோம். எங்கள் கூட்டணி, இந்தத் தேர்தலிலும் வெற்றி பெறும். இந்த தேர்தலில், நடிகர் விஜய் மீது ஒரு ஈர்ப்பு இருப்பது உண்மைதான். இந்த ஈர்ப்பு, ஒரு புதிய அரசியல் கட்சி களத்திற்கு வரும்போது இயல்பாக இருப்பது தான். அது, தி.மு.க., போன்ற பெரிய கூட்டணியை பாதிக்காது. பிரிந்து கிடக்கும் எதிரணிக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்.
-- பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், மா.கம்யூ.,

Advertisement