மகளிர் காங்., தலைவர் ஹசீனா சையத் விலகல்
சென்னை: தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து, ஹசீனா சையத் நீக்கப்படுவதாக, அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தலைவர் அல்கா லம்பா நேற்று அறிவித்தார். இதையடுத்து, கட்சியில் இருந்து ஹசீனா சையத் விலகினார்.
சட்டசபை தேர்தலில், கிருஷ்ணகிரி அல்லது மேலுார் தொகுதியில் போட்டியிட, ஹசீனா சையத் வாய்ப்பு கேட்டிருந்தார். அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
இதையடுத்து, கட்சியின் மாநிலத் தலைமை மீது அவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்தார். இந்நிலையில், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக, ஹசீனா சையத்தை கட்சிப் பதவியிலிருந்து நீக்கி அல்கா லம்பா அறிவித்தார்.
ஆனால், கட்சியில் இருந்தே விலகிக் கொள்வதாக, கட்சி தலைவர் கார்கே, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் ஆகியோருக்கு ஹசீனா சையத் கடிதம் அனுப்பி உள்ளார்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்